திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி கடந்த 5 தேர்தல்களாக அதிமுகவும், திமுகவும் மாறிமாறி வெற்றிபெற்று வந்திருக்கும் தொகுதி. இந்தமுறை அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதாவுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சி மாறினாலும், வேட்பாளர் ஒருவரே என்ற நிலையில் களமிறங்கியுள்ளார் நயினார் நாகேந்திரன்.
திருநெல்வேலி தொகுதியில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், திமுக சார்பில் ALS லெட்சுமணன், அமமுக சார்பில் மகேஷ் கண்ணன், நாம் தமிழர் சார்பில் சத்யா ஆகியோர் களம் கண்டுள்ளனர்.
2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் இந்த முறை பாஜக சார்பில் போட்டியிடுகிறார். 2016 சட்டமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற A.L.S.லட்சுமணன் 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திமுக சார்பில் போட்டியிடுகிறார்.
இத்தொகுதியில் இதுவரை நடந்து முடிந்த 16 சட்டமன்ற தேர்தல்களில் திமுக 6 முறையும், அதிமுக 7 முறையும் காங்கிரஸ் மூன்று முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஐந்து தேர்தல்களாக திமுகவும், அதிமுகவும் மாறிமாறி தொகுதியை கைப்பற்றிவருகின்றன. 2001ல் அதிமுக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் வெற்றிபெற்ற நிலையில், 2006 ல் திமுக சார்பில் போட்டியிட்ட மாலைராஜா வெற்றிபெற்றார். 2011ல் அதிமுக சார்பில் நயினார் நாகேந்திரனும், 2016ல் திமுக சார்பில் லட்சுமணனும் வெற்றி பெற்றனர்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்து பாரதிய ஜனதாவுக்கு மாறிய நயினார் நாகேந்திரன், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஏற்கனவே அதிமுக சார்பில் 4 முறை போட்டியிட்ட அனுபவத்தில் அவர், 5 ஆவது முறையாக நெல்லை தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவான லட்சுமணன், திமுக சார்பில் போட்டியிடுகிறார்.
அமமுக சார்பில் மகேஷ் கண்ணன் போட்டியிடுகிறார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பால் கண்ணன் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதால், மாற்று வேட்பாளரான மகேஷ் கண்ணன் போட்டியிடுகிறார். இவருக்கு இது முதல் சட்டமன்றத் தேர்தலாகும்.
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சத்யா, 2019 நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்றார். கடந்த 8 ஆண்டுகளாக கட்சியின் மாவட்ட மகளிரணி அமைப்பாளராக இருக்கும் இவர், தற்போது சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
பாஜகவிற்கு மாறிய பிறகு முதல்முறையாக இத்தொகுதியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனுக்கு இத்தேர்தல் சாதகமாக அமையப்போகிறதா? கடந்த முறை வென்ற திமுக வேட்பாளருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப் போகிறார்களா நெல்லை மக்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3w5FaU5திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி கடந்த 5 தேர்தல்களாக அதிமுகவும், திமுகவும் மாறிமாறி வெற்றிபெற்று வந்திருக்கும் தொகுதி. இந்தமுறை அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதாவுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சி மாறினாலும், வேட்பாளர் ஒருவரே என்ற நிலையில் களமிறங்கியுள்ளார் நயினார் நாகேந்திரன்.
திருநெல்வேலி தொகுதியில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், திமுக சார்பில் ALS லெட்சுமணன், அமமுக சார்பில் மகேஷ் கண்ணன், நாம் தமிழர் சார்பில் சத்யா ஆகியோர் களம் கண்டுள்ளனர்.
2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் இந்த முறை பாஜக சார்பில் போட்டியிடுகிறார். 2016 சட்டமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற A.L.S.லட்சுமணன் 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திமுக சார்பில் போட்டியிடுகிறார்.
இத்தொகுதியில் இதுவரை நடந்து முடிந்த 16 சட்டமன்ற தேர்தல்களில் திமுக 6 முறையும், அதிமுக 7 முறையும் காங்கிரஸ் மூன்று முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஐந்து தேர்தல்களாக திமுகவும், அதிமுகவும் மாறிமாறி தொகுதியை கைப்பற்றிவருகின்றன. 2001ல் அதிமுக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் வெற்றிபெற்ற நிலையில், 2006 ல் திமுக சார்பில் போட்டியிட்ட மாலைராஜா வெற்றிபெற்றார். 2011ல் அதிமுக சார்பில் நயினார் நாகேந்திரனும், 2016ல் திமுக சார்பில் லட்சுமணனும் வெற்றி பெற்றனர்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்து பாரதிய ஜனதாவுக்கு மாறிய நயினார் நாகேந்திரன், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஏற்கனவே அதிமுக சார்பில் 4 முறை போட்டியிட்ட அனுபவத்தில் அவர், 5 ஆவது முறையாக நெல்லை தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவான லட்சுமணன், திமுக சார்பில் போட்டியிடுகிறார்.
அமமுக சார்பில் மகேஷ் கண்ணன் போட்டியிடுகிறார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பால் கண்ணன் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதால், மாற்று வேட்பாளரான மகேஷ் கண்ணன் போட்டியிடுகிறார். இவருக்கு இது முதல் சட்டமன்றத் தேர்தலாகும்.
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சத்யா, 2019 நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்றார். கடந்த 8 ஆண்டுகளாக கட்சியின் மாவட்ட மகளிரணி அமைப்பாளராக இருக்கும் இவர், தற்போது சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
பாஜகவிற்கு மாறிய பிறகு முதல்முறையாக இத்தொகுதியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனுக்கு இத்தேர்தல் சாதகமாக அமையப்போகிறதா? கடந்த முறை வென்ற திமுக வேட்பாளருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப் போகிறார்களா நெல்லை மக்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்