கொரோனாவுக்கான கோவாக்சின் தடுப்பு மருந்தின் செயல்திறன் 81 விழுக்காடாக இருப்பதாக 3-வது கட்ட பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் என்ற பெயரில் கொரோனா தடுப்பு மருந்தை முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கியுள்ளது. இம்மருந்தின் முதல் 2 கட்ட சோதனைகள் திருப்திகரமான முடிவை தந்த நிலையில் 25 ஆயிரத்து 800 பேருக்கு கொடுக்கப்பட்டு 3ஆவது கட்ட சோதனை நடத்தப்பட்டது.
18 முதல் 98 வரையிலான பல்வேறு வயது பிரிவினர், பல்வேறு இணை நோயுள்ளவர்கள் என பல தரப்பட்டவர்களிடம் கொடுத்து சோதிக்கப்பட்டதில் இம்மருந்தின் செயல் திறன் 81% ஆக இருப்பதாக பாரத் பயோடெக் தனது இடைக்கால அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் கிடைத்துள்ள மிகப்பெரிய முன்னேற்றம் எனத் தெரிவித்துள்ள பாரத் பயோடெக் நிறுவனம் புதிய வகை கொரோனா வைரசுக்கு எதிராகவும் கோவாக்சின் சிறப்பாக செயல்படுவதாக கூறியுள்ளது.
40 நாடுகள் கோவாக்சின் தடுப்பு மருந்தை கேட்டுள்ளதாகவும் பாரத் பயோடெக் கூறியுள்ளது. சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் கோவாக்சின் தடுப்பு மருந்து சோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்