தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது முதல் 55 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். முறையற்ற பண விநியோகம் மற்றும் பரிமாற்றத்தை தடுக்கும் வகையில், வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவில் 250 அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு படை அமைக்கப்பட்டது. அவர்களுடன் வருமான வரித்துறையைச் சேர்ந்த மேலும் 400 அதிகாரிகளும் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் வந்த பிப்ரவரி 27-ஆம் தேதி முதல் இதுவரை தமிழகத்தில் 15 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 55 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த தேர்தல்கள் வரை அதிக அளவில் பணம் வைத்துள்ளவர்களே கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வருமானவரித்துறைக்கு கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் சோதனை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதவிர ஒரு லட்சத்துக்கும் மேல் பணம் எடுக்கப்படும் வங்கி கணக்குகளையும் வருமான வரித்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பதுக்கிவைக்கப்பட்டதா என உறுதியாக தெரியவில்லை எனக் கூறியுள்ள வருமான வரித்துறை தங்களது சோதனை குறித்து நாள்தோறும் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பிவருவதாகவும் கூறியுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தலின்போது வருமான வரித்துறை அளித்த தகவலின் பேரியிலேயே, அதிக பணப்புழக்கம் காரணமாக தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் வருமான வரித்துறை தகவலாலேயே, சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்