வங்கியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து ரூ. 4.60 கோடி மோசடி செய்த தொழிலதிபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை மவுண்ட் ரோடு பெடரல் வங்கிக் கிளையின் உதவி துணை தலைவரான ஜோஸ்மான் டேவிட் என்பவர் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார். கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் ஸ்வஸ்திக் அசோசியேட்ஸ் நிறுவனத்தை சேர்ந்த சிலர் தங்களது வங்கியை அணுகி கோடக் மஹிந்திரா வங்கியில் உள்ள ரூ. 2 கோடி கிரெடிட் லோனை தங்களது வங்கி கிளைக்கு மாற்றவும், தங்களது நிறுவனத்திற்கு 8 லாரியை வாங்கப்போவதாக கூறி ரூ. 2.60 கோடியை வங்கியில் லோன் வாங்கி அதற்கான ஆவணங்களையும் சமர்பித்தனர்.
பின்னர் அவர்கள் அளித்த ஆவணங்களை சரிபார்த்தபோது போலி என்பது தெரியவந்ததாக புகாரில் தெரிவித்தார். இதனையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நங்கநல்லூரில் A to Z லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தை நடத்தி வரக்கூடிய ரமேஷ் (51) என்பவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. ரமேஷ் தனது அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த நபரை பார்ட்னராக காண்பித்து ஸ்வஸ்திக் அசோசியேட்ஸ் பெயரில் நிறுவனத்தை ஆரம்பித்து பெடரல் வங்கியில் போலியான ஆவணங்களை சமர்பித்து லோன் வாங்கி ஏமாற்றியது தெரியவந்தது. இதனையடுத்து ரூ. 4.63 கோடியை ஏமாற்றிய நங்கநல்லூரை சேர்ந்த ரமேஷ் மற்றும் போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்த சேப்பாக்கத்தை சேர்ந்த ரவிந்திரன் (41) என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான 2 பேரும் இன்னும் கடன் மோசடிகளை அரங்கேற்றி இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனால் 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். நீதிமன்றத்தில் போலீஸ் காவல் மனுதாக்கல் செய்ய உள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்