சென்னையில் ஒரே தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் படிப்படியாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிவருவது குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டு வருகிறது. இதனால் 12ஆம் வகுப்புதவிர பள்ளிகளுக்கு காலவரையறையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்களும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கத்துடன் ஒத்துழைக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்துவருகிறது.
இந்நிலையில், சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒரு நிறுவனத்துக்கு சொந்தமான தரமணி, பெருங்குடி மற்றும் கந்தன்சாவடியில் உள்ள 3 கிளைகளில் 40 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது கண்டறியப்பட்டுள்ளது.
மருத்துவத்துறையைச் சேர்ந்த இந்த தனியார் நிறுவனத்தில் இரண்டு பேருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சுகாதாரத்துறை சார்பாக அங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 40 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே இந்த 40 பேருடன் தொடர்பில் இருந்த மற்றவர்களையும் பரிசோதித்து தனிமைப்படுத்தும் பணியில் சுகாதாரத்துறை ஈடுபட்டு வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்