பெனெல்லி டி.ஆர்.கே 502 X BS6 பைக் இந்தியாவில் அறிமுகமாகியுள்ள நிலையில், அதன் சிறப்பம்சங்கள் குறித்து இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.
BS6 இன்ஜினை உள்ளடக்கிய பெனெல்லி டி.ஆர்.கே 502 X BS6 விலை ரூபாய் 5.10 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. மெட்டாலிக் டார்க் க்ரே, வெள்ளை நிறம், பெனெல்லி ரெட் உள்ளிட்ட நிறங்களில் சந்தையில் இறக்குமதி ஆகியுள்ள இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூமின் விலை இந்தியாவில் 5.29 லட்சமாக உள்ளது. BS4 வாகனங்களை ஒப்பிடும் போது, இந்த பெனெல்லி டி.ஆர்.கே 502 X BS6 பைக் 31, 000 ரூபாய் மலிவானது ஆகும்.
பழைய மாடலில் இருந்து சிறிதளவு மாற்றங்களை மட்டும் உள்ளடக்கி வந்திருக்கும், இந்த பைக்கில் பேக் லிட் ஸ்விட்ச் கியர், கைக்கு அடக்கமான அலுமினிய கவர்கள், ஹேண்டில் பார் கிரிப், பின்னால் வரும் கண்ணாடிகளை பார்க்க உதவும் கண்ணாடிகள் உள்ளிட்டவற்றில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. வேகம், பெட்ரோல் அளவு உள்ளிட்ட விவரங்களை காண்பிக்கும் முன்பக்கம் மீட்டர் ஆரங்சு நிற எல்.இ.டி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
19 இன்ச் தடிமன் கொண்ட முன்பக்க டயரையும், 17 இன்ச் தடிமன் கொண்ட பின்பக்க டயரையும் கொண்ட இந்த பைக்கில் 20 லிட்டர் வரை பெட்ரோல் நிரப்பிக்கொள்ள முடியும். பைக்கின் முன்பகுதியில் இடம்பெற்றுள்ள கண்ணாடியும், பின்பகுதியில் அலுமினிய பிராக்ட் உள்ளிட்டவை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.
ப்ரேக்கை பொருத்தவரையில், முன் டயருக்கு 320mm டிஸ்க் ப்ரேக்கும், பிண்டயருககு 260 mm டிஸ்க்கும் கொடுக்கப்பட்டுள்ளது. 499 cc திறன் கொண்ட இந்த பைக்கில் இரட்டை என்ஜின்களுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸூம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் 10,000 முன் பணம் கொடுத்து பெனெல்லி டி.ஆர்.கே 502 பைக்கை புக் செய்து கொள்ளலாம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்