Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

கள்ளக்குறிச்சி: அதிமுக வேட்பாளரை மாற்றக் கோரி 3வது நாளாக சாலை மறியல் போராட்டம்

கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளரை மாற்றக் கோரி சாலை மறியல். அதிமுகவிலிருந்து ராஜினாமா செய்வோம் என கோஷங்களை எழுப்பி போராட்டம் நடைபெற்றது.

வருகிற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி (தனி) சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அதிமுக சார்பில் பலர் விருப்பமனு அளித்திருந்த நிலையில் மாவட்ட அமைப்புச் சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளரும், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க இயக்குனருமான செந்தில்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

image

இதையடுத்து கள்ளக்குறிச்சி (தனி) சட்டமன்றத்தொகுதி வேட்பாளரை மாற்றி அறிவிக்கக் கோரி அழகுவேல் பாபு ஆதரவாளர்கள் மறியல் போராட்டத்தை நடத்தி வந்தனர். அதில் தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மூன்றாவது நாளாக இன்று 500க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னை, திருவண்ணாமலை, சேலம் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வேட்பாளரை மாற்றா விட்டால் கள்ளக்குறிச்சி நகர நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்யப்போவதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன் தலைமையிலான போலீசார் கூட்டத்தை கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினார்.

image

ஆனால் கள்ளக்குறிச்சி நகரசெயலாளர் பாபு மற்றும் கட்சித் தொண்டர்கள் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கள்ளக்குறிச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பெண்கள் உட்பட 1000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3ezcBrL

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்