Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

மத்திய அரசின் கொள்கைப்படி தமிழகத்தில் 33 லட்சம் பழைய வாகனங்கள் அழிப்பு?

மத்திய அரசின் பழைய வாகன அழிப்பு கொள்கைப்படி தமிழகத்தில் சுமார் முப்பத்து மூன்று லட்சம் வாகனங்கள் அழிக்கப்படும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கில் 2021-22ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் பழைய வாகனங்களை புழக்கத்தில் இருந்து நீக்குவது தொடர்பான அறிவிப்பு இடம்பெற்றிருந்தது. அதன்படி 20 ஆண்டுகளுக்கு மேல் புழக்கத்தில் இருக்கும் தனிநபர் உபயோக வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருக்கும் அரசு மற்றும் பொது உபயோக வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட உள்ளன.

இதில் கர்நாடக மாநிலத்தில் மட்டும் 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சுமார் 70 லட்சம் வாகனங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு அடுத்ததாக உத்தரபிரதேச மாநிலத்தில் 56.5 லட்சம் பழைய வாகனங்களும், தலைநகர் டெல்லியில் 50 லட்சம் பழைய வாகனங்களும் புழக்கத்தில் உள்ளன. கேரளாவில் 34.5 லட்சம் பழைய வாகனங்களும், தமிழகத்தில் 33 லட்சம் வாகனங்களும் பயன்பாட்டில் உள்ளதால் இவை புழக்கத்தில் இருந்து அழிக்கப்பட உள்ளன.

பொதுமக்கள் 20 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்களின் பயன்பாட்டை கைவிட வேண்டும் என்பதற்காக GREEN TAX எனப்படும் புதிய வரிவிதிப்பை அமல்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/2PxqmNj

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்