திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின்போது தொகுதி எண்ணிக்கையில் ஏற்பட்ட மாறுபட்ட கருத்து காரணமாக தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. திமுக கூட்டணியில் பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்காததால் வருத்தத்தில் இருந்தது. இந்நிலையில் நேற்றிரவு காங்கிரஸ் - திமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது.
இதையடுத்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. 2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்