சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது ரூ.25அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது சிலிண்டரின் விலை ரூ.835ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, 2020 ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி வீட்டு உபயோக சிலிண்டர் ஒன்றின் விலை 734 ரூபாயாக இருந்தது. அதற்கு அடுத்த மாதத்திலேயே சிலிண்டரின் விலையானது 734 லிருந்து 881 ரூபாயாக உயர்ந்தது. அடுத்து வந்த மாதங்களில் சிலிண்டர் விலை இறங்குமுகத்தில் காணப்பட்ட நிலையில், மே மாதத்தில் அந்த ஆண்டின் குறைந்தபட்ச விலையாக ஒரு சிலிண்டரின் விலை 569 ரூபாய் 50 காசாக விற்கப்பட்டது.

அடுத்து வந்த மாதங்களில் சிலிண்டர் விலை மாற்றமில்லாமல் காணப்பட்ட நிலையில், சென்ற செப்டம்பரில் சிலிண்டர் ஒன்றின் விலை 610 ரூபாயாகவும், டிசம்பர் ஒன்றாம் தேதி 660 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. டிசம்பர் 15ஆம் தேதி சிலிண்டர் ஒன்றின் விலை 710 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த மாதம் 4ம் தேதி ரூ.25 அதிகரித்து ரூ.735ஆக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி 15ல் மேலும் ரூ.50 அதிகரித்து 785ஆக இருந்தது. பிப்ரவரி இறுதியில் ரூ.25 அதிகரிக்கப்பட்டு ரூ.810 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மேலும் ரூ.25அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போதைய விலை ரூ.835ஆக உள்ளது. சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரிக்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3q4n94z

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்