தமிழகத்தில் 24 நாட்களாக மாற்றமின்றி விற்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை இன்று குறைந்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா , மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு வரை, கடந்த பிப்ரவரி மாதம் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்த வண்ணம் இருந்தது. பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிப்ரவரி 27ஆம் தேதி முதல், எந்த மாற்றமும் இன்றி விற்கப்பட்டது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டன. இந்த நிலையில் 24 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் தலா லிட்டருக்கு 16 காசுகள் குறைந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் 92 ரூபாய் 95 காசுகளுக்கும், டீசல் 86 ரூபாய் 29 காசுகளுக்கும் விற்பனையாகிறது. இம்மாத தொடக்கத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 71 அமெரிக்க டாலரில் இருந்து, 64 டாலராக குறைந்துள்ளது. இதையடுத்து, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் குறைத்துள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3vTq7Nkதமிழகத்தில் 24 நாட்களாக மாற்றமின்றி விற்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை இன்று குறைந்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா , மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு வரை, கடந்த பிப்ரவரி மாதம் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்த வண்ணம் இருந்தது. பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிப்ரவரி 27ஆம் தேதி முதல், எந்த மாற்றமும் இன்றி விற்கப்பட்டது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டன. இந்த நிலையில் 24 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் தலா லிட்டருக்கு 16 காசுகள் குறைந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் 92 ரூபாய் 95 காசுகளுக்கும், டீசல் 86 ரூபாய் 29 காசுகளுக்கும் விற்பனையாகிறது. இம்மாத தொடக்கத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 71 அமெரிக்க டாலரில் இருந்து, 64 டாலராக குறைந்துள்ளது. இதையடுத்து, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் குறைத்துள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்