Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை

"என் 24 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கை இந்த 22 யார்டில் இருந்தது" என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய ஓய்வு குறித்த பேச்சின்போது குறிப்பிட்டார். அவர் சொன்ன அந்த '22 யார்டு' என்பது கிரிக்கெட் பிட்ச்சின் நீளம். ஆனால், இப்போது அந்த பிட்ச்தான் கடந்த சில வாரங்களாக கிரிக்கெட் உலகில் பேசுபொருளாக உலா வருகிறது. அதற்கு காரணம், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகள். அதிலும் இரு அணிகளுக்கு இடையே அகமதாபாதில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டி இரண்டே நாளில் முடிவடைந்ததுதான் கிரிக்கெட் உலகில் பிட்ச் தொடர்பான விவகாரத்தை பெரிதும் கிளப்பியிருக்கிறது. மேலும், இந்தியாவில் இருக்கும் பிட்ச் தரமற்றதாக இருப்பதாகவும் சர்ச்சைகள் தொடங்கியிருக்கிறது.

image

இந்நிலையில், இந்தியாவில் ஒரு பிட்ச் எப்படி தயார் செய்யப்படுகிறது என்பதை தெரிந்துக்கொள்ளலாம். களிமண்ணில் தயார் செய்யப்படும் பிட்சில் நிறைய நீரை தினசரி அடிப்படையில் தெளித்துக் கொண்டேயிருக்க வேண்டும். இது டெஸ்ட் போட்டியின் முதல் நாளுக்குப் பிறகு ஈரப்பசை காய்ந்துவிடுவதில் போய் முடியும்; பிறகு பிட்ச் மிகவும் மந்தமாகிவிடும். பின்பு சுழற் பந்துவீச்சாளர்களுக்கு பந்து திரும்பினாலும் மெதுவாகவே திரும்பும். செம்மண் தரை பிட்ச்சில் நல்ல பவுன்ஸ் இருப்பதோடு, சுழற்பந்துகள் பவுன்ஸுடன் நன்றாகத் திரும்பும். இப்படித்தான் இந்தியாவில் பொதுவாக டெஸ்ட் மேட்ச்களுக்கு வடிவமைக்கப்படுகிறது. ஏறக்குறைய இந்தியாவில் இருக்கும் அனைத்து மைதானங்களின் பிட்ச்சும் களிமண் தரையில் உருவாக்கப்படுவதுதான்.

image

அதேபோல ஒரு பிட்ச் 22 யார்டு நீளமாகவும், 10 அடி அகலமாகவும் இருக்க வேண்டும். இது உலகத்தில் இருக்கும் அனைத்து பிட்ச்களின் விதியாக இருக்கும். உலகில் இரண்டே விதமான பிட்ச்தான். ஒன்று, வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் அல்லது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும். சில நேரங்களில் இரண்டுக்கும் சாதகமில்லா "டெட் பிட்ச்" ஆக இருக்கும் அவ்வளவுதான். இப்போது அகமதாபாதில் இரு அணிகளும் விளையாடிய பிட்ச் முழுக்க முழுக்க சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. இந்தியாவில் இருக்கும் அனைத்து பிட்ச்களும் பல ஆண்டுகளாக சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகவே இருந்து வருகிறன்றன. இது இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் எந்த வெளிநாட்டு அணிக்கும் தெரிந்த விஷயம்தான்.

image

ஆனால், இம்முறை இங்கிலாந்து பிட்ச் குறித்து பெரும் அதிருப்தியும் தெரிவித்து வருகிறது. இது சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலிருந்தே தொடங்கிவிட்டது. சென்னையில் முதல் டெஸ்ட் போட்டி 5 நாள்கள் முழுவதும் நடந்ததும்; அதுவும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்தான். ஆனால், ஜோ ரூட் இரட்டை சதமடித்தார்; இங்கிலாந்தும் வென்றது. ஆனால், இரண்டாவது டெஸ்ட் போட்டி 4 நாள்களில் முடிவடைந்தது. அதில், இந்தியா அபார வெற்றி பெற்றது. அந்தப் போட்டியிலேயே இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ளும் திறன் வெளிப்பட்டு சாயம் வெளுத்தது என்பது உண்மை. அங்கிருந்துதான் இங்கிலாந்தின் கதறல்கள் தொடங்கியன.

image

தோல்வி சோகத்துடன் அகமதாபாத் போட்டிக்கு சென்ற இங்கிலாந்து வீரர்களுக்கு அக்ஸர் படேலும், அஸ்வினும் தங்களது திறமையான சுழற் பந்துவீச்சில் திணற வைத்தனர் என்பதுதான் உண்மை. இதனால், இங்கிலாந்து அகமதாபாத் டெஸ்டில் தோல்வியடைந்தது. உச்சகட்டமாக இந்தப் போட்டி இரண்டே நாளில் முடிவடைந்தது. உடனடியாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் உள்பட பலரும் பிட்ச் குறித்த புகாரை முன்வைத்தனர். ஆனால் விராட் கோலி, "பிட்ச் நன்றாகத்தான் இருந்தது; இரு அணிகளின் பேடஸ்மேன்கள்தான் சரியாக விளையாடவில்லை” என்று கூறினார். உண்மையில் சென்னை, அகமதாபாத் பிட்ச்கள் மோசமானவையா? இந்திய பிட்ச்கள் மீதான இங்கிலாந்து வீரர்கள் பார்வை சரியானதா? இந்திய அணி இதுபோன்ற புகார்களை வெளிநாடுகளில் வைத்திருக்கிறார்களா? - இப்படி பல்வேறு கேள்விகள் எழும்.

image

ஆனால், இதற்கெல்லாம் ஒரே பதில்: 'இல்லை' என்பதுதான். உதாரணத்துக்கு, அண்மையில் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் 36 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அது பகலிரவு டெஸ்ட் போட்டிதான்; அதே பிங்க் நிற பந்துதான். உலகில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆ்பபிரிக்கா மற்றும் நியூசிலாந்து நாட்டில் இருக்கும் பிட்ச்கள் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாகவே இருக்கும்; இந்தியா உள்ளிட்ட பல அணிகள் அந்த வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளனர். அப்போதெல்லாம் இந்தியா உள்ளிட்ட எந்த அணியும் வேகப் பந்துவீச்சு பிட்ச்களில் விளையாட முடியவில்லை; இது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு இழுக்கு என கூறவேயில்லை. அதனால், சுழற் பந்துவீச்சுக்கு சாதமாக இருக்கும் பிட்சை மட்டும் ஏன் குறை கூறுகிறார்கள் என தெரியவில்லை.

image

கிரிக்கெட்டில் தீபகற்ப நாடுகளான இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளில் பிட்ச்கள் அனைத்துமே சுழலுக்கு ஏற்றதே. இப்படிதான் காலம் காலமாக போட்டிகள் நடந்து வருகின்றன. பிட்ச்சுக்கு எதிராக குரல்கள் வந்தாலும், அகமதாபாத் பிட்ச்சுக்கு ஆதரவான குரல்கள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. இதில் இங்கிலாந்தின் குறைப்பாட்டை வெளுத்து வாங்கியவர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் இயான் சாப்பல். அவர் "சென்னை ஆடுகளத்திலேயே இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் திறமையை அறிந்துகொண்டுதான் அகமதாபாத்துக்கு 3 சுழற் பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியது. சுழற் பந்துவீச்சுக்கு எதிராக இங்கிலாந்து பேட்ஸ்மேன்களால் விளையாட முடியாது. அந்தத் திறமை இல்லை என்பதை இந்திய வீரர்கள் சரியாகக் கணித்தனர்" என்றார்.

image

மேலும் பேசிய அவர், "இங்கிலாந்து வீரர்களுக்குத் தெரிந்த ஷாட் எல்லாமே, ரிவர்ஸ் ஸ்வீப்பில் விளையாடுவது அல்லது கிரீஸை விட்டு இறங்கிவந்து அடித்து, பந்துவீச்சாளர்களின் லென்த்தை மாற்றி விளையாடுவது; இதைத் தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை. அதிலும் ஜானி பேர்ஸ்டோவுக்கு அக்ஸர் படேல் வீசிய பந்து நேராக ஸ்டெம்ப்பை நோக்கி வந்தது. அந்தப் பந்தை ஆடத் தெரியாமல் விக்கெட்டை இழந்தார்" என சுழற் பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாட முடியாத திறனை வெளிப்படையாக போட்டுடைத்தார் இயான் சாப்பல்.

இப்படியான நியாயமான விவாதங்கள் முன் வைத்தாலும், ரூட் ஒரு போட்டியில் லார்ட்ஸ் ஆடுகளம் மீதே விமர்சனம் வைத்தார். அப்படி கோலியால் அகமதாபாத் பிட்ச் மோசமானது என சொல்ல முடியுமா என கேட்கின்றனர். இது தேவையற்ற விவாதமாகவே இருக்கிறது.

எது எப்படியோ வியாழக்கிழமை இரு அணிகளுக்கு இடையே கடைசி டெஸ்ட் போட்டி அதே அகமதாபாதில்தான் நடக்கிறது. இம்முறை பிட்ச் எப்படி இருக்கும் என்பதே பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/2Pr2jzF

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்