டி20 தொடரை வெல்லப்போவது யார் என்பதை முடிவு செய்யும் கடைசிப் போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்றிரவு பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் குஜராத் மாநிலம் ஆகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதலாவது, 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்தும், 2-வது, 4-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்தத் தொடரில் 4 ஆட்டங்களில் ஆடியுள்ள தொடக்க வீரர் கே.எல்.ராகுல் ராகுல் 2 டக்-அவுட் உள்பட வெறும் 15 ரன் மட்டுமே எடுத்து சொதப்பியுள்ளார். இதனால் அவர் நீக்கப்படுவாரா? அல்லது மறுபடியும் வாய்ப்பு வழங்கப்படுமா? என்பது போட்டிக்கு முன்புதான் தெரிய வரும். வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் உடல்தகுதியை எட்டிவிட்ட போதிலும் கடைசி ஆட்டத்தில் சேர்க்கப்படுவாரா என தெரியவில்லை.
இந்தியாவின் பேட்டிங்கை பொறுத்தவரை ரோகித் சர்மா, சூர்யகுமார், இஷான் கிஷன், கோலி, ஸ்ரேயாஸ் ஐய்யர், ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாகவே பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல பவுலிங்கில் புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்ட்யா, ஷர்துல் தாகூர் ஆகியோர் சிறப்பாகவே பந்துவீசுகின்றனர். சுழற்பந்துவீச்சை பொறுத்தவரை சஹாலை விட ராகுல் சஹார் கடந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டார்.
இங்கிலாந்தை பொறுத்தவரை ஜாஸ் பட்லர், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ ஆகியோர் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர். கேப்டன் மார்கனும், டேவிட் மலானும் தங்களது வழக்கமான ஆட்டத்திறனை இன்னும் வெளிப்படுத்தவில்லை. பந்துவீச்சை பொறுத்தவரை வுட்ஸ் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சரை அந்த அணி பெரிதும் நம்பியிருக்கிறது. பேட்டிங்கிலும் ஜோப்ரா ஆர்ச்சர் களமிறங்கி அதிரடியாக விளையாடுவது அவ்வணிக்கு கூடுதல் பலம்.
இங்கிலாந்து அணி தனது கடைசி எட்டு 20 ஓவர் தொடர்களை இழந்ததில்லை. இந்நிலையில் இந்தியா இந்தத் தொடரை கைப்பற்றினால் இங்கிலாந்தின் தொடர் வெற்றிக்கு புற்றுப்புள்ளி வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3cPjJxJடி20 தொடரை வெல்லப்போவது யார் என்பதை முடிவு செய்யும் கடைசிப் போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்றிரவு பலப்பரீட்சை நடத்துகின்றன.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்