தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்து 800-ஐ நெருங்கியுள்ளது. குறிப்பாக சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு மாத காலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு படிப்படியாக உயர்ந்து ஒரே நாளில் 1,779 பேருக்கு தொற்று என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, அதிகபட்சமாக சென்னையில் 664 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 162 பேரும், கோவையில் 153 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்து 73 ஆயிரத்து 219 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,027 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 50 ஆயிரத்து 91 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 11 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 641 ஆக உயர்ந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3lPCc1tதமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்து 800-ஐ நெருங்கியுள்ளது. குறிப்பாக சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு மாத காலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு படிப்படியாக உயர்ந்து ஒரே நாளில் 1,779 பேருக்கு தொற்று என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, அதிகபட்சமாக சென்னையில் 664 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 162 பேரும், கோவையில் 153 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்து 73 ஆயிரத்து 219 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,027 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 50 ஆயிரத்து 91 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 11 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 641 ஆக உயர்ந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்