பொருளாதார சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்ட 30 ஆண்டுகள் கழித்து, இந்திய வரைபடமாக்கல் துறைக்கான சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரைபடமாக்கல் மற்றும் வரைபடமாக்கல் சார்ந்த தரவுகள் தொடர்பான முந்தைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன. ஜியோஸ்பேஷியல் டேட்டா (Geospatial Data) என சொல்லப்படும் புவியிடம் சார் தரவுகளை சேகரிப்பது தொடர்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய நெறிமுறைகளே இதற்கு அடிப்படையாக அமைகின்றன.
பிரதமர் நரேந்திர மோடியும், இந்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் விரிவாக பகிர்ந்து கொண்டதில் இருந்தே இதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளலாம். #Freedom2MapIndia எனும் ஹாஷ்டேகுடன் இந்தச் செய்திகளை பகிர்ந்து கொண்ட பிரதமர், இந்திய ஸ்டார்ட் அப்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான மகத்தான வாய்ப்பாக இது அமையும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் கருத்தை ஆமோதிப்பது போலவே, ஸ்டார்ட் அப் துறையினர் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர். ஸ்டார்ட் அப் துறையினர் மட்டும் அல்ல, வர்த்தகத் துறை வல்லுனர்களும் கூட, இந்திய வரைபடமாக்கல் உலகிற்கான கதவுகளை அகல திறந்துவிடப்பட்டதாக இந்த அறிவிப்பு அமைந்திருப்பதாக கருத்து தெரிவித்துள்ளன.
ஸ்மார்ட்போனை திறந்தால், சர்வசாதாரணமாக கூகுள் வரைபடத்தை அணுக வாய்ப்புள்ள நிலையில், வரைபடமாக்கல் தொடர்பான அறிவிப்புக்கு ஏன் இத்தனை ஆர்பாட்டம் என பலரும் நினைக்கலாம்.
நவீன தொழில்நுட்பம் காரணமாக, இணைய வரைபடமாக்கல் எவ்வளவோ முன்னேறி வந்துள்ள நிலையில், இன்னும் இந்திய நிறுவனங்கள் வரைபடமாக்கல் விவரங்களுக்காக கூகுள் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களை சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. நாமும் கூட உணவு டெலிவரியில் துவங்கி, தெரியாத இடங்களுக்கு வழி தேட வேண்டும் என்றால் கூகுள் வரைபடத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அதற்காக, இந்திய நிறுவனங்களிடம் இத்தகைய தகவல்கள் உருவாக்குவதற்கான திறன் இல்லை என நினைத்துவிட வேண்டாம். இந்த விஷயத்தில் இந்திய நிறுவனங்களின் கைகள் கட்டப்பட்டிருந்தன. வரைபடமாக்கல் விவரங்களை சேகரிக்க வேண்டும் எனில், அவை பல அடுக்குகளில் அனுமதி பெற வேண்டியிருந்தது.
இப்போது இந்தக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, இந்திய நிறுவனங்கள் அனுமதி பெறும் தேவையில்லாமலே புவியிடம் சார் தகவல்களை சேகரிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'புவியிடம் சார் தரவுகள்'...
இந்த அறிவிப்பால் ஏற்படக்கூடிய தாக்கங்களைப் பார்ப்பதற்கு முன், 'புவியிடம் சார் தரவுகள்' என்றால் என்ன என பார்த்துவிடலாம். பூமியின் நிலப்பரப்பின் மீதுள்ள குறிப்பிட்ட இடம் சார்ந்த தகவல்களை எளிதாக அணுகும் வகையில் உணர்த்துவதையே 'புவியிடம் சார் தகவல்' என்கின்றனர். ஆங்கிலத்தில் 'ஜியோஸ்பேஷியல் டேட்டா' என இது குறிப்பிடப்படுகிறது.
எந்த ஒரு இடம் தொடர்பான தகவல்களையும், உள்ளங்கை நெல்லிக்கனி போல புரிந்துகொள்ள வரைபடமாக்கல் உதவுகிறது என்றால், அந்த இடத்தின் நீள, அகலம் உள்ளிட்ட இன்னும் பிற தகவல்களை சேகரித்து, திசை சார்ந்த விவரங்களையும் உள்ளடக்கி, எளிதாக புரிந்துகொள்ள புவியுடம் சார் தகவல்கள் கைகொடுக்கின்றன.
இத்தகைய தகவல்களை கொண்டு மிக எளிதாக, முப்பரிமான வரைபடங்களை உருவாக்கி விடலாம். இந்த வரைபடங்களை இணையம் மூலம் அணுகலாம் என்பதோடு, தொடர்ந்து அப்டேட் செய்து கொண்டிருக்கலாம்.
இதற்கேற்ப இப்போது, விமானத்தில் பறந்து படமெடுப்பது, டிரோன் வழியே தகவல் சேகரிப்பது என வரைபடமாக்கல் நுட்பங்களும் வளர்ந்திருக்கிறது. மேலும், செயற்கைகோள் மூலம் வான்வழி படமாக்கலும் வெகு துல்லியம் ஆகியிருப்பதோடு, தரையிலும் கூட லிடார் எனும் கருவிகள் கொண்ட வாகனம் மூலம் ஓர் இடத்தை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து தகவல்களை சேகரித்து விடலாம்.
இந்தப் பிரிவில் 'கூகுள் மேப்ஸ்' முன்னிலையில் இருக்கிறது. 'ஆப்பிள் மேப்ஸ்', மைக்ரோசாப்டின் 'பிங் மேப்ஸ்' மற்றும் ஓபன் சோர்ஸ் தன்மை கொண்ட 'ஓபன்ஸ்டிரீட்மேப்ஸ்' போன்ற சேவைகளும் இருக்கின்றன. இந்தியாவில் 'மேப் மை இந்தியா' நிறுவனம் இப்பிரிவில் முன்னோடி என்றாலும், சர்வதேச நிறுவனங்களை விட பின் தங்கியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
கூகுள் மேப்புக்கு செக்...
ஏற்கெனவே பார்த்தது போல, இந்தியாவில் வரைபடமாக்கல் தகவல்கள் சேகரிப்பு தொடர்பான கட்டுப்பாடுகள் இருக்கின்றன. தேசத்தின் பாதுகாப்பை மனதில் கொண்டு, இந்தக் கட்டுப்பாடுகள் அமைந்துள்ளதையும் புரிந்துகொள்ளலாம்.
ஆனால், தொழில்நுட்பம் வெகுவாக முன்னேறியுள்ள நிலையில், இந்தக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சாத்தியமாகும் தொழில்நுட்பம் இந்திய நிறுவங்களுக்கும் கிடைக்க வேண்டும் எனும் நோக்கில், புதிய நெறிமுறைகள அமைவதாக குறிப்பிடப்பட்டுள்ளதை இங்கே கவனிக்க வேண்டும்.
எனவே, வரைபட சேவை நோக்கில் பார்த்தால், புதிய நெறிமுறைகளை மிகப் பெரிய சீர்திருத்தம் என்றே கருதவேண்டும். இந்த நெறிமுறைகள், வரைபடமாக்கல் சேவை வழங்குவதில் இந்திய நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கு ஊக்குவிக்கும்,
இந்த நெறிமுறைகளில், இந்திய நிறுவனங்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு மீட்டருக்கும் மேல் துல்லியம் கொண்ட தகவல்களை சேமித்து வைப்பதில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 'கூகுள் மேப்ஸ்' உள்ளிட்ட சேவைகளுக்கு வைக்கப்பட்ட 'செக்'காக இதை கருதலாம்.
சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட இஸ்ரோ மற்றும் மேப் மை இந்தியா இடையிலான கூட்டு முயற்சியை இந்த இடத்தில் பொருத்திப் பார்க்கலாம். செயற்கைகோள் படமாக்கலில் இஸ்ரோவுக்கு உள்ள ஆற்றலையும், நுட்பங்களையும் கொண்டு மேம்பட்ட வரைபட சேவையை இந்திய நிறுவனமான 'மேம் மை இந்தியா' அளிக்க இது உதவும் என எதிர்பார்க்கலாம்.
ஆனால், கூகுளுக்கான போட்டி சேவை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், உண்மையில் வரைபடமாக்கல் தொடர்பான எல்லையில்லா வாய்ப்புகளை இந்திய நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள இது உதவும் என்பதே வல்லுனர்கள் கருத்தாக இருக்கிறது.
நிறுவனங்களுக்கு மட்டும் அல்ல; அவை வழங்க கூடிய வரைபடமாக்கல் சேவைகள் தொடர்பாக இந்திய விவசாயம் துவங்கி, அரசு திட்டங்களை செயல்படுத்துவது வரை எண்ணற்ற முறையில் இதனால் பயன்பெறலாம் என்கின்றனர். அந்த மாற்றங்களையும், வளர்ச்சியையும் எதிர்பார்க்கலாம்.
- சைபர்சிம்மன்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3jTf2X5பொருளாதார சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்ட 30 ஆண்டுகள் கழித்து, இந்திய வரைபடமாக்கல் துறைக்கான சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரைபடமாக்கல் மற்றும் வரைபடமாக்கல் சார்ந்த தரவுகள் தொடர்பான முந்தைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன. ஜியோஸ்பேஷியல் டேட்டா (Geospatial Data) என சொல்லப்படும் புவியிடம் சார் தரவுகளை சேகரிப்பது தொடர்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய நெறிமுறைகளே இதற்கு அடிப்படையாக அமைகின்றன.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்