Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

எல்பிடபிள்யூ or கேட்ச்?: குழம்பிய 3வது நடுவர் - சென்னை டெஸ்ட்டில் சர்ச்சை!

சென்னையில் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மூன்றாவது நடுவரின் முடிவு தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது.

75-வது ஓவரை இங்கிலாந்து வீரர் லீச் வீசிய நிலையில், இந்திய துணை கேப்டன் அஜிங்கிய ரஹானே பார்வர்ட் ஷாட் லெக்கில் கேட்ச் ஆனார். களத்தில் இருந்த நடுவர் அவுட் தர மறுக்கவே, இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 3-வது நடுவரை அணுகினார். ஆனால், மூன்றாவது நடுவர் எல்பிடபிள்யூ முறையில்தான் அவுட் கேட்கிறார்கள் என நினைத்து, ரஹானே அவுட் இல்லை என அறிவித்தார்.

image

இதனால் மைதானத்தில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து தவறை உணர்ந்து கொண்ட போட்டி நடுவர், இங்கிலாந்து இழந்த ரிவியூ வாய்ப்பை மீண்டும் வழங்கினார். இந்த நிகழ்வு நிகழ்ந்த 6 பந்துகளுக்கு பிறகு, ரஹானே மொயின் அலி பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல, லீச் பந்தில் ரோஹித் சர்மா ஸ்டெம்பிங் செய்யப்பட்ட போது, 3-வது நடுவர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். தொலைக்காட்சி ரீ பிளேபியில், ரோஹித் சர்மாவின் கால் எல்லைக்கோட்டின் மேலே இருந்தது.

இதற்கிடையே, முதல் நாள் ஆட்டம் முடிந்ததும், காணொளி மூலம் செய்தியாளர்களிடம் பேசிய ரோஹித் சர்மா, அணிக்கு எப்பொழுதெல்லாம் ரன்கள் தேவைப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் ரகானே முக்கியமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார் என்று பாராட்டினார். ரிஷப் பண்ட் மற்றும் அக்சர் பட்டேல் நிலைத்து நின்று ஆடும் பட்சத்தில் இந்திய அணி நல்ல இலக்கை எட்டும் என்றும் ரோஹித் சர்மா கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/37f1nnX

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்