லடாக் எல்லை விவகாரத்தில் ஒரு ‘இன்ச்’ நிலத்தை கூட யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
லடாக் எல்லையில் எத்தகைய சோதனை ஏற்பட்டாலும் அதனை சந்திக்கத் தயார் எனவும் மாநிலங்களவையில் ராஜ்நாத் சிங் கூறினார். லடாக் கிழக்குப் பகுதியின் தற்போதைய நிலவரம் குறித்து மாநிலங்களவையில் விளக்கமளித்த ராஜ்நாத் சிங்,“ லடாக் எல்லையில் பதட்டத்தை தணிக்க 9 கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. எல்லையில் ஒரு அங்குல நிலத்தை கூட விட்டுத் தர மாட்டோம்.
படைகளை குவித்து அச்சுறுத்திய சீனாவை தைரியத்துடன் சமாளித்து இந்திய வீரர்கள் பதிலடி தந்தனர். எல்லையில் பதட்டத்தை தணிக்க பாங்காங் ஏரி அருகே படைகளை விலகிக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது”என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2LDSmgzலடாக் எல்லை விவகாரத்தில் ஒரு ‘இன்ச்’ நிலத்தை கூட யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
லடாக் எல்லையில் எத்தகைய சோதனை ஏற்பட்டாலும் அதனை சந்திக்கத் தயார் எனவும் மாநிலங்களவையில் ராஜ்நாத் சிங் கூறினார். லடாக் கிழக்குப் பகுதியின் தற்போதைய நிலவரம் குறித்து மாநிலங்களவையில் விளக்கமளித்த ராஜ்நாத் சிங்,“ லடாக் எல்லையில் பதட்டத்தை தணிக்க 9 கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. எல்லையில் ஒரு அங்குல நிலத்தை கூட விட்டுத் தர மாட்டோம்.
படைகளை குவித்து அச்சுறுத்திய சீனாவை தைரியத்துடன் சமாளித்து இந்திய வீரர்கள் பதிலடி தந்தனர். எல்லையில் பதட்டத்தை தணிக்க பாங்காங் ஏரி அருகே படைகளை விலகிக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது”என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்