Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

சூறாவளி போல் கொசுக்கள் கூட்டம்.. அதிர்ந்து போன வாகன ஓட்டிகள்: வைரல் வீடியோ

https://ift.tt/2ZYpgMA

அர்ஜென்டினாவின் சாலையில் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த வாகன ஓட்டிகள், தொலைவில் சூறாவளி போல் தோன்றிய கொசுக் கூட்டங்களை கண்டு திகைத்துப் போயினர்.

அர்ஜென்டினா சாலையில் வாகன ஓட்டுநர்கள் வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருக்கையில், சூறாவளி போன்று ஒரு காட்சி தென்பட்டுள்ளது. இதனைக்கண்ட ஓட்டுநர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதனையடுத்து அதன் அருகில் சென்றபோது அது கொசுக்கள் சேர்ந்து கூட்டமாக சூறாவளி போன்று காட்சியளித்தது தெரியவந்துள்ளது. தரையிலிருந்து எழுந்த கொசுக் கூட்டங்கள் துாரத்திலிருந்து பார்க்க ஒரு சூறாவளியை போலவே இருந்துள்ளது. சாலையில் சென்று கொண்டிருந்த பயணியால் எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவிவருகிறது.

image

மேலும் இதுகுறித்து அர்ஜென்டினா ஆய்வக அறிவியலாளர் ஒருவர், இது கவலைப்படக்கூடிய விஷயம் இல்லை என்று தெரிவித்துள்ளார். பெருமழையினால் ஏற்பட்ட வெள்ளம் தேங்கியிருப்பதால் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார். மேலும் இதனை பார்ப்பதற்கு பயங்கரமானதாக தெரிந்தாலும் மனிதர்களுக்கு அவற்றால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளார். இதனை உடனடியாக அழிப்பதற்கான நடவடிக்கையை தற்போது மேற்கொள்ள தேவையில்லை. அவை 15 தினங்களில் தானாகவே உயிரிழந்து விடும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்