சென்னையில் இன்று நடைபெறும் ஐபிஎல் 2021 ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித்தை ஏலத்தில் எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
14-ஆவது ஐபிஎல் தொடர் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ளது. இதில் பங்கேற்கும் அணிகள் வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் சென்னையில் முதன்முறையாக நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் 164 இந்திய வீரர்கள் உட்பட 292 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் ஹர்பஜன் சிங் மற்றும் கேதார் ஜாதவ் ஆகிய 2 இந்திய வீரர்களுக்கு அடிப்படை விலையாக 2 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், ஷகிப் அல் ஹசன், மொயீன் அலி, சாம் பில்லிங்ஸ், லியாம் பிளங்கெட், ஜேசன் ராய், மார்க் உட் ஆகிய 7 வெளிநாட்டு வீரர்களுக்கு 2 கோடி ரூபாய் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐபிஎல்லில் முன் எப்போதும் இல்லாத வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் இம்முறை அணியை வலுப்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது.
இந்நிலையில் கேதார் ஜாதவ், முரளி விஜய், ஹர்பஜன் சிங், பியுஷ் சாவ்லா, மோனு சிங், ஷேன் வாட்சன் ஆகியோரை சிஎஸ்கே விடுவித்துள்ளது. ராஜஸ்தான் அணியிலிருந்த ராபின் உத்தப்பாவை சென்னை அணி சேர்த்துக்கொண்டுள்ளது. இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வசம் 19 கோடியே 90 லட்சம் ரூபாய் மட்டுமே கையிருப்பு தொகை உள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெறும் ஏலத்தில் சில வீரர்களை சிஎஸ்கே நிர்வாகம் ஏலத்தில் எடுக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி பேட்ஸ்மேன்களில் முகமது அசாருதின், கருண் நாயர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை ஏலமெடுக்கும் எனக் கூறப்படுகிறது. சிஎஸ்கே அணியால் ஒரேயொரு வெளிநாட்டு வீரர்களை வாங்கலாம் என்பதால் அணியின் முதல் சாய்ஸாக ஸ்டீவ் ஸ்மித் இருப்பார் எனத் தெரிகிறது. ஆல் ரவுண்டர்களில் மோசஸ் ஹென்ரிக்ஸ், ஷிவம் துபே ஆகியோரை சிஎஸ்கே தேர்வு செய்யும் என கூறப்படுகிறது. பந்துவீச்சை பொறுத்தவரை உமேஷ் யாதவ், கிருஷ்ணப்ப கவுதம் ஆகியோரை சிஎஸ்கே விலைக்கு வாங்கும் எனத் தெரிகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/37oNqnkசென்னையில் இன்று நடைபெறும் ஐபிஎல் 2021 ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித்தை ஏலத்தில் எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
14-ஆவது ஐபிஎல் தொடர் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ளது. இதில் பங்கேற்கும் அணிகள் வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் சென்னையில் முதன்முறையாக நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் 164 இந்திய வீரர்கள் உட்பட 292 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் ஹர்பஜன் சிங் மற்றும் கேதார் ஜாதவ் ஆகிய 2 இந்திய வீரர்களுக்கு அடிப்படை விலையாக 2 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், ஷகிப் அல் ஹசன், மொயீன் அலி, சாம் பில்லிங்ஸ், லியாம் பிளங்கெட், ஜேசன் ராய், மார்க் உட் ஆகிய 7 வெளிநாட்டு வீரர்களுக்கு 2 கோடி ரூபாய் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐபிஎல்லில் முன் எப்போதும் இல்லாத வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் இம்முறை அணியை வலுப்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது.
இந்நிலையில் கேதார் ஜாதவ், முரளி விஜய், ஹர்பஜன் சிங், பியுஷ் சாவ்லா, மோனு சிங், ஷேன் வாட்சன் ஆகியோரை சிஎஸ்கே விடுவித்துள்ளது. ராஜஸ்தான் அணியிலிருந்த ராபின் உத்தப்பாவை சென்னை அணி சேர்த்துக்கொண்டுள்ளது. இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வசம் 19 கோடியே 90 லட்சம் ரூபாய் மட்டுமே கையிருப்பு தொகை உள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெறும் ஏலத்தில் சில வீரர்களை சிஎஸ்கே நிர்வாகம் ஏலத்தில் எடுக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி பேட்ஸ்மேன்களில் முகமது அசாருதின், கருண் நாயர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை ஏலமெடுக்கும் எனக் கூறப்படுகிறது. சிஎஸ்கே அணியால் ஒரேயொரு வெளிநாட்டு வீரர்களை வாங்கலாம் என்பதால் அணியின் முதல் சாய்ஸாக ஸ்டீவ் ஸ்மித் இருப்பார் எனத் தெரிகிறது. ஆல் ரவுண்டர்களில் மோசஸ் ஹென்ரிக்ஸ், ஷிவம் துபே ஆகியோரை சிஎஸ்கே தேர்வு செய்யும் என கூறப்படுகிறது. பந்துவீச்சை பொறுத்தவரை உமேஷ் யாதவ், கிருஷ்ணப்ப கவுதம் ஆகியோரை சிஎஸ்கே விலைக்கு வாங்கும் எனத் தெரிகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்