கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இது தவிர மேற்கு வங்கம் மாநிலத்தில் மேலும் பல ரயில் திட்டங்களையும் பிரதமர் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்துகொள்ளவில்லை. முன்னதாக அசாம் மாநிலத்திலும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்து பேசிய பிரதமர், அசாமில் உள்கட்டமைப்பை மேம்படுத்த மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
அசாம் மாநிலம் தேமாஜி பகுதியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துப்பேசிய அவர், மாநிலத்தில் பெரும் ஆற்றல்கள் இருந்தபோதிலும், இதற்கு முன்பு ஆண்ட அரசுகள் அவற்றை பயன்படுத்திக்கொள்வதில் அக்கறை காட்டவில்லை என்று விமர்சித்தார். சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்து வரும் மோடி வரும் 25ஆம் தேதி கோவை வர உள்ளது குறிப்பிடத்தக்கது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3kgcNgkகொல்கத்தாவில் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இது தவிர மேற்கு வங்கம் மாநிலத்தில் மேலும் பல ரயில் திட்டங்களையும் பிரதமர் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்துகொள்ளவில்லை. முன்னதாக அசாம் மாநிலத்திலும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்து பேசிய பிரதமர், அசாமில் உள்கட்டமைப்பை மேம்படுத்த மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
அசாம் மாநிலம் தேமாஜி பகுதியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துப்பேசிய அவர், மாநிலத்தில் பெரும் ஆற்றல்கள் இருந்தபோதிலும், இதற்கு முன்பு ஆண்ட அரசுகள் அவற்றை பயன்படுத்திக்கொள்வதில் அக்கறை காட்டவில்லை என்று விமர்சித்தார். சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்து வரும் மோடி வரும் 25ஆம் தேதி கோவை வர உள்ளது குறிப்பிடத்தக்கது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்