பிரதமர் மோடியிடம் நீட் விலக்கு, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை உள்ளிட்ட தமிழக பிரச்னைகள் தொடர்பாக முதலமைச்சர் கேள்வி எழுப்பினாரா என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்
திமுகவின் நாகை, தஞ்சை மாவட்டங்கள் சார்பில் பூம்புகார் அருகே 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களிடம் கோரிக்கை மனு பெற்றபின்னர் பேசிய அவர், கமிஷன் பெற்றே 5 லட்சம் கோடி ரூபாய்க்கு தமிழகத்திற்கு கடனை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டினார்.
மேலும் “மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு பெற்ற திட்டங்களை முதலமைச்சரால் பட்டியலிட முடியுமா? மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு பெற்ற திட்டங்கள் என்ன? தேர்தலுக்காக பிரதமர் மோடி ஷோ காட்டுகிறார். மதுரையில் எய்ம்ஸ் எங்கே என்பதே நான் கேட்கும் கேள்வி. எய்ம்ஸ் குறித்து பிரதமரிடம் முதல்வர் கேள்வி எழுப்புவாரா? பிரதமர் மோடியிடம் நீட் விலக்கு, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை உள்ளிட்ட தமிழக பிரச்னைகள் தொடர்பாக முதலமைச்சர் கேள்வி எழுப்பினாரா?” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2LQuTJbபிரதமர் மோடியிடம் நீட் விலக்கு, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை உள்ளிட்ட தமிழக பிரச்னைகள் தொடர்பாக முதலமைச்சர் கேள்வி எழுப்பினாரா என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்
திமுகவின் நாகை, தஞ்சை மாவட்டங்கள் சார்பில் பூம்புகார் அருகே 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களிடம் கோரிக்கை மனு பெற்றபின்னர் பேசிய அவர், கமிஷன் பெற்றே 5 லட்சம் கோடி ரூபாய்க்கு தமிழகத்திற்கு கடனை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டினார்.
மேலும் “மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு பெற்ற திட்டங்களை முதலமைச்சரால் பட்டியலிட முடியுமா? மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு பெற்ற திட்டங்கள் என்ன? தேர்தலுக்காக பிரதமர் மோடி ஷோ காட்டுகிறார். மதுரையில் எய்ம்ஸ் எங்கே என்பதே நான் கேட்கும் கேள்வி. எய்ம்ஸ் குறித்து பிரதமரிடம் முதல்வர் கேள்வி எழுப்புவாரா? பிரதமர் மோடியிடம் நீட் விலக்கு, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை உள்ளிட்ட தமிழக பிரச்னைகள் தொடர்பாக முதலமைச்சர் கேள்வி எழுப்பினாரா?” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்