ஈரோடு பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அரசு கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஈரோடுமாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி செயல்பட்டுவருகிறது. இக்கல்லூயில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பயின்று வருகின்றனர். இம்மாணவ மாணவிகள் பெரும்பாலும் விடுதியில் தங்கி பயில்கின்றனர். இக்கல்லூரி முதலில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்தது. பின்னர் 2018ஆம் ஆண்டு ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி என பெயர் மாற்றம் செய்யபட்டது. அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டு 2 ஆண்டுகளாகியும் இன்னும் பழைய கட்டணமே வசூலிக்கப்படுகிறது என மாணவர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் ஆண்டுக்கு 13 ஆயிரத்து 610 ரூபாயாக அரசு நிர்ணயித்துள்ள நிலையில் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் 3 லட்சத்து 85 ஆயிரம் வசூலிக்கப்படுவதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர். தமிழகத்தில் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியிலும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியிலும் மட்டுமே கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இம்மாதம் முதல் வாரத்தில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரிக்கு கட்டண குறைப்பு தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான நிலையில் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியிலும் கட்டணத்தையும் குறைக்கக்கோரி மருத்துவ மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வந்தனர். அரசாணை வெளியிடும் வரை இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என மாணவர்கள் தெரிவித்தனர்.
இரண்டு வாரங்களை தாண்டி போராட்டம் நீடித்த நிலையில், ஈரோடு பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அரசு கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ் படிப்புக்கு ஆண்டு கட்டணமாக ரூ13,610 என நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே எம்பிபிஎஸ் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ4 லட்சம் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது அது அரசுக் கட்டணமாக மாற்றப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறையின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவிக்கப்பட்ட பின்பும் பழைய கட்டணமே வசூலிக்கப்பட்டு வந்ததால் மாணவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அரசு கட்டணம் நிர்ணயித்து தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியை தொடர்ந்து ஈரோடு பெருந்துறை மருத்துவ கல்லூரியிலும் அரசுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்