"திமுக வேண்டுமென்றே திட்டமிட்டு எழுவர் விடுதலைக்காக போராடுவதுபோல் தோற்றத்தை ஏற்படுத்தி, வரும் தேர்தலில் அனுதாபத்தைப் பெறுவதற்காக நாடகம் நடத்துகிறது" என்று முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எழுந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "பேரறிவாளன், சாந்தன், முருகன் உட்பட எழுவர் விடுதலை விவகாரத்தில் திமுக தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வருகிறது. அதற்கான தெளிவான விளக்கங்களை தருகிறேன்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரான கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் நளினியின் மரண தண்டனையை மட்டும் ஆயுள் தண்டனையாக குறைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றியது. பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்களை நிராகரிக்கலாம் எனவும் அமைச்சரவை முடிவு செய்தது.
அதனைத்தொடர்ந்து பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது.
ஆனால், மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் பேரறிவாளன் உட்பட மூவரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினார்.
ஜெயலலிதா அமைச்சரவையில் மாநில அரசுக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஏழு பேரையும் முன்விடுதலை செய்யவும் முடிவு செய்யப்பட்டது. எழுவர் விடுதலை தொடர்பாக அடிக்கடி அறிக்கை வெளியிடும் திமுக, பேரறிவாளன், சாந்தன், முருகனை விட்டுவிட்டு நளினியின் தண்டனையை மட்டும் குறைக்க முடிவெடுத்தது ஏன் என்ற கேள்விக்கு தற்போதுவரை பதில் இல்லை.
கருணாநிதி அமைச்சரவையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் கருணை மனுவை நிராகரிக்கலாம் என்ற அமைச்சரவை முடிவில் அப்போதய அமைச்சர்களாக இருந்த துரைமுருகன், பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என் நேரு உள்ளிட்ட ஏழுபேரும் கையெழுத்திட்டுள்ளனர்.
அதிமுக அரசை பொறுத்தவரை 7 பேருக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என உண்மையாக செயல்பட்டு வருகிறது. அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதோடு மட்டுமல்லாமல், ஆளுநரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் 7 பேர் விடுதலை தொடர்பாக விரைவில் முடிவெடுக்க வலியுறுத்தி வருகிறோம்.
இறுதியாக ஜனவரி 29ம் தேதி ஆளுநரை சந்தித்து போது 7 பேர் விடுதலை தொடர்பாக வலியுறுத்தினோம். 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறேன்.
திமுக வேண்டுமென்றே திட்டமிட்டு 7 பேர் விடுதலைக்காக போராடுவது போல், தோற்றத்தை ஏற்படுத்தி வரும் தேர்தலில் அனுதாபத்தை பெறத்தான் நாடகம் நடத்துகிறது" என்றார் முதல்வர் பழனிசாமி.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்