Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் இன்று சென்னையில் தொடக்கம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலையில் தொடங்குகிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ஆஸ்திரேலிய தொடரின் கடைசி மூன்று போட்டிகளில் விளையாடாத கேப்டன் விராட் கோலி அணிக்கு திரும்புகிறார். ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும், காயத்திலிருந்து மீண்டுள்ள இஷாந்த் சர்மாவும் ஆடும் லெவனில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

image

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியை பொறுத்தவரையில் முன்னணி வீரர்களான பென் ஸ்டோக்ஸ், பட்லர், ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராட் உள்ளிட்டோர் களமிறங்குவார்கள் எனத் தெரிகிறது. சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்துக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில், போட்டியில் ரிஷப் பந்த் விளையாடுவார் என செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி தெரிவித்தார். மேலும், ”நாட்டில் நடைபெறும் எந்த ஒரு பிரச்னைக்கும் அனைத்து தரப்பினருமே தங்களது கருத்துகளை வெளிப்படுத்துவர். விவசாயிகள் போராட்டம் குறித்த கருத்தை ஒவ்வொருவரும் வெளிப்படுத்தி வருகின்றனர். இது குறித்து அணியின் கூட்டத்திலும் விரிவாக பேசினோம்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறித்து பெரிதாக பேசிக் கொள்ளவில்லை. அதேபோல் தற்போதும் சில மாதங்களுக்குப் பிறகு நடைபெறவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்காக அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம்” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3pPl8tG

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்