Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்களிடையே குறையும் ஆர்வம்: காரணம் என்ன? ‌‌

https://ift.tt/2YYWzi6

இந்தியாவில் இதுவரை 60 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் கூட, மக்களிடையே தடுப்பு மருந்து எடுத்துக் கொள்வதற்கான ஆர்வம் குறைந்திருப்பதாகவே தெரிகிறது. இதற்கான காரணம் என்ன?

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்குவதற்கு முன்பும், ஜனவரி 16ஆம் தேதிக்கு பிறகும் மக்கள் தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ள மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர். அதன்பலனாக இந்தியா உலக அளவில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. அதாவது 24 நாட்களில் 60 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 60 லட்சத்தை தாண்ட அமெரிக்காவில் 26 நாட்களும், பிரிட்டனில் 46 நாட்களும் ஆனது. ஜனவரி 16ஆம் தேதி மருத்துவப் பணியாளர்களுக்கும், பிப்ரவரி 2ஆம் தேதி முன்களப்பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது தொடங்கப்பட்டது.

image

இதுவரை 54 லட்சத்துக்கும் அதிகமான மருத்துவ பணியாளர்களுக்கும், 6 லட்சத்துக்கும் அதிகமான முன்களப்பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்‌ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 6 லட்சத்து 73 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் உள்ளன. தமிழகத்தை பொறுத்துவரை ஒரு லட்சத்து 66 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்கள் செல்ல செல்ல மக்களிடையே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான ஆர்வம் குறைந்து வருவதாக தெரிகிறது. இதற்கு கொரோனா வைரஸ் பரவல் தானாக குறைந்ததே காரணம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். கொரோனா வைரஸ் என்பது யூகிக்க முடியாத அளவுக்கு விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் அதனை எளிதாக எடுத்துக் கொள்ளாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், தடுப்பூசி எடுத்துக் கொள்வதும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்