எல்லையில் அமைதியை நிலைநாட்ட இந்தியாவும் சீனாவும் சில முடிவுகளை எடுத்திருக்கின்றன. இதன் மூலம் பதற்றம் குறைவதற்கான சூழல் உருவாகியிருப்பதாக நம்பப்படுகிறது.
லடாக் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேரை சீனப் படைகள் கொன்றதை அடுத்து, இருநாடுகளுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. பல மாதங்களாக நீடித்துவரும் பிரச்னைக்குத் தீர்வுகாண்பதற்கென நடத்தப்பட்ட 8 சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலும் எவ்வித உடன்பாடு எட்டப்படாத நிலையில், 9ஆவது கட்டமாக இருநாடுகளின் உயர்நிலை அளவில் பேச்சு நடைபெற்றது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, சீன ராணுவத்தின் பீரங்கிகள் பாங்காங் பகுதியிலிருந்து அந்நாட்டு எல்லை நோக்கி கொண்டு செல்லப்படுகின்றன. அந்தப் பகுதியில் ராணுவத்தினரின் எண்ணிக்கையையும் சீனா குறைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் இந்திய ராணுவம் எல்லையில் குவிக்கப்பட்டிருக்கும் படைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் எனவும் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், முக்கிய சிகரங்களில் இருந்து இந்தியப் படைகள் விலக்கிக் கொள்ளப்படாது என்றும், அங்குள்ள முகாம்கள் தொடர்ந்து செயல்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின் வாயிலாக லடாக் எல்லையில் பதற்றம் தணியும் என்று நம்பப்படுகிறது. ஆனாலும், குளிர்காலத்திற்குப் பின்னர் சீனா மீண்டும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் இறங்கக்கூடும் என்ற சந்தேகமும் உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்