கரூரில் திருக்குறள் சொன்னால் பெட்ரோல் இலவசம் என்ற பங்க் உரிமையாளரின் அறிவிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்வால் பலரும் கவலைப்பட்டு வரும் நிலையில், கரூரில் திருக்குறள் கூறினால் பெட்ரோல் இலவசம் என்ற பெட்ரோல் பங்க் உரிமையாளரின் அறிவிப்பால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து திருக்குறளை கூறி இலவசமாக பெட்ரோல் நிரப்புவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஓட்டுக்காக அரசியல்வாதிகள் இலவசங்களை கூறிவரும் நிலையில் இலவசமாக பெட்ரோலை கொடுத்து திருக்குறளை வளர்க்க பெட்ரோல் பங்க் உரிமையாளர் எடுக்கும் முயற்சி பலராலும் பாராட்டப்படுகிறது.
கரூர் - திண்டுக்கல் சாலையில், அரவக்குறிச்சி அருகே நாகம்பள்ளி ஊராட்சியில் உள்ளது வள்ளுவர் நகர். இங்கு செங்குட்டுவன் என்பவர் பெட்ரோல் பங்க், கலை அறிவியல் கல்லூரி, மேலாண்மை கல்லூரி மற்றும் உணவு விடுதிகளை திருவள்ளுவர் பெயரில் நடத்தி வருகிறார். திருக்குறள் மீது மிகுந்த பற்று கொண்ட இவர் திருக்குறளை வளர்க்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக தனது பெட்ரோல் பங்கிற்கு வந்து பத்து குறள்களை சொல்லும் மாணவரின் பெற்றோருக்கு அரை லிட்டர் பெட்ரோல் இலவசம். 20 குறள்களை சொல்லு மாணவரின் பெற்றோருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். இந்த அறிவிப்பை அறிந்த பொதுமக்கள் ஆச்சரியப்பட்டு, தங்களது குழந்தைகளை அழைத்துச் சென்று திருக்குறளை கூற வைத்து இலவசமாக பெட்ரோலை நிரப்பிச் செல்கின்றனர். பிள்ளைகளுக்கு திருக்குறளை ஞாபகப்படுத்துவோடு இலவசமாக பெட்ரோல் கிடைக்கிறது என்கின்றனர் பெற்றோர்.
இப்போது பெரும்பாலான மாணவர்களிடம் வாசிக்கும் பழக்கம் இல்லை. மாணவர்களின் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக இலவச பெட்ரோல் வழங்குகிறோம். குறிப்பாக இளைய தலைமுறை பண்போடு வளர நமக்கு கிடைத்த அறநூல் திருக்குறள். எனவே திருக்குறளை வாசிக்க வேண்டும் என்பதற்காக இலவச பெட்ரோல் வழங்குகிறோம் என்றார் பெட்ரோல் பங்க் உரிமையாளர் செங்குட்டுவன்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2MPtUK1கரூரில் திருக்குறள் சொன்னால் பெட்ரோல் இலவசம் என்ற பங்க் உரிமையாளரின் அறிவிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்