சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிவடைந்ததையடுத்து சிறையில் இருந்து இளவரசி இன்று விடுதலை ஆகிறார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனை காலம் நிறைவு மற்றும் அபராதம் செலுத்தியதால் கடந்த 27ஆம் தேதி சசிகலா விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில், இன்று இளவரசி விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதனிடையே, கொரோனா பாதிக்கப்பட்ட இளவரசி, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனை காலம் நிறைவடைந்ததையடுத்து, இளவரசி இன்று காலை 11 மணி அளவில் சிறையில் இருந்து விடுதலை ஆவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்