Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

தமிழக சட்டப்பேரவை தேர்தல் பா.ஜ.க மேலிட பொறுப்பாளராக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமனம்

https://ift.tt/3ap3aaV

தமிழக சட்டபேரவை தேர்தலுக்கான பா.ஜ.க.மேலிட பொறுப்பாளராக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டியை நியமனம் செய்து பா.ஜ.க. தலைமை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுத்த வண்ணம் இருக்கிறார்கள். ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க.தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் தமிழகம் வந்து கூட்டணி விவகாரம் தொடர்பாகவும், சட்டப்பேரவைத் தேர்தல் வியூகம் வகுப்பது தொடர்பாகவும் கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து உள்ளனர்.

அதே நேரத்தில் வருகிற 14-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகிறார். காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தியும் இரண்டாவது முறையாக 3 நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வர இருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைமை சார்பில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான மேலிடப் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

image

மத்திய உள்துறை இணை அமைச்சராக இருக்கக்கூடிய கிஷன் ரெட்டி தமிழ்நாடு மேலிட பொறுப்பாளராகவும், இணை பொறுப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் வி.கே.சிங் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதையடுத்து மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் வி.கே.சிங் ஆகியோர் விரைவில் தமிழ்நாடு வரை இருக்கிறார்கள்.

இதே போன்று காங்கிரஸ் கட்சி சார்பிலும் வருகின்ற 5 மாநில சட்டமன்றத்தேர்தலுக்கான பொறுப்பாளர்கள் பட்டியலை இன்றைய தினம் அகில இந்திய காங்கிரஸ் தலைமை வெளியிட்டது. அதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில மேலிட பொறுப்பாளராக டாக்டர் ஹர்ஷ்வர்தன் ஷாம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இரண்டு தேசியக் கட்சிகளும் தமிழகத்தில் தற்போது தேர்தல் தொடர்பான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்