மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சி தொடங்கி முதல் சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதால், கமல்ஹாசன் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
மக்கள் நீதி மய்யம் முதன்முதலில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்து 3.73 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது. ஆனால், அந்தத் தேர்தலில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடவில்லை. இந்நிலையில், வருகிற சட்டமன்றத் தேர்தலில் வேளச்சேரி, மயிலாப்பூர் ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்றிலும், கோவை, மதுரைக்குட்பட்ட ஏதேனும் ஒரு தொகுதியிலும் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு அதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையைப் பொருத்தவரை, வேளச்சேரி, மயிலாப்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளும் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்டவை. இந்தத் தொகுதியில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 465 வாக்குகளைப் பெற்று, மூன்றாம் இடத்தை மக்கள் நீதி மய்யம் பெற்றது. உட்கட்டமைப்பு சரிவர இல்லாத நிலையிலேயே, 12.03 விழுக்காடு வாக்குகளை இங்கு பெற்றிருந்தது. அதனால், வேளச்சேரி அல்லது மயிலாப்பூர் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் போட்டியிட்டால் நிச்சயமாக வெற்றியடைய முடியும் என கமல்ஹாசனிடம் தெரிவிக்கப்பட்டு, அதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதோடு, ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியிலும் கமல்ஹாசன் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தத் தொகுதி ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்டு வருகிறது. இதிலும், 1 லட்சத்து 35 ஆயிரத்து 525 வாக்குகளைப் பெற்று மக்கள் நீதி மய்யம் மூன்றாம் இடம் பிடித்திருந்தது. அதுமட்டுமின்றி, எம்ஜிஆர் முதன்முதலில் போட்டியிட்ட பரங்கிமலை தொகுதி தற்போது ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டே வருகிறது.
சென்னைக்குட்பட்ட ஒரு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ள கமல்ஹாசன், கோவை, மதுரை மாவட்டங்களில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, அக்கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் கோவை நாடாளுமன்றத் தொகுதியில்தான் போட்டியிட்டார். அதோடு, அங்குதான் தமிழகத்திலேயே அதிகபட்சமாக 1 லட்சத்து 45 ஆயிரத்து 104 வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெற்றது. அதனால், கமல்ஹாசன் போட்டியிடும் மற்றொரு தொகுதி கோவைக்கு உட்பட்டதாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. மக்கள் நீதி மய்யம் சார்பில் கடந்த 21-ம் தேதி விருப்பமனு விநியோகம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதனால், தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான சில தினங்களில் தமிழகம் முழுக்க போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் எனவும் கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்