Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

“புதிய வேளாண் சட்டங்கள் உணவு பாதுகாப்பு கட்டமைப்பையே அழித்துவிடும்”- ராகுல்காந்தி தாக்கு

புதிய வேளாண் சட்டங்கள் இந்தியாவின் உணவு பாதுகாப்பு கட்டமைப்பையே அழித்து விடும் என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை எம்பியுமான ராகுல்காந்தி எச்சரித்துள்ளார்.

மக்களவையில் நடைபெற்ற மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பேசிய ராகுல் காந்தி, அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களால் கிராமப்புற பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிவித்தார். வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் மட்டும் போராட்டம் நடத்தவில்லை என்றும் ஒட்டுமொத்த நாடே போராடி வருவதாகவும் ராகுல் பேசினார்.

குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்துக்காக ஒரு காலத்தில் பயன்படுத்தப்பட்ட 'நாம் இருவர் நமக்கு இருவர்' என்ற வாக்கியத்தைப்போல தற்போதைய ஆட்சி நடந்து வருவதாகவும் ராகுல் தெரிவித்தார். தற்போது குறிப்பிட்ட இருவர் நலனுக்காக மட்டுமே இருவர் ஆட்சி செய்வதாகவும் அந்த 4 பேர் யார் என்பது நாட்டுக்கு நன்றாக தெரியும் என்றும் ராகுல் தெரிவித்தார்.

image

3 புதிய வேளாண் சட்டங்களில் முதலாவது சட்டம் மண்டி முறையை இல்லாமல் செய்து விடும் எனக் குறிப்பிட்ட ராகுல், இரண்டாவது சட்டம் பெருந்தொழிலதிபர்கள் கட்டுப்பாடின்றி விவசாய விளைபொருட்களை பதுக்க வழி செய்யும் என்றார். விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காத விவசாயி அதை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகுவதை 3ஆவது சட்டம் தடுப்பதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

இதனிடையே ராகுல் காந்தி தவறான தகவல்களை கூறுகிறார் என பாஜக உள்ளிட்ட ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். ராகுலை தொடர்ந்து பேச அனுமதிக்குமாறு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் பதிலுக்கு முழக்கமிட்டனர். இதன் பின் பேசிய ராகுல், விவசாயிகள் போராட்டத்தின் போது இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு கூறினார். இதையடுத்து காங்கிரஸ், திமுக, திரிணமுல் காங்கிரஸ் எம்பிக்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3tSRplK

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்