மேற்கு வங்காள மாநில பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி (Yuva Morcha) பொதுச் செயலாளரான பாமெலா கோஸ்வாமி 100 கிராம் கொக்கைன் கொண்டு சென்ற குற்றத்திற்காக கைது செய்துள்ளனர் போலீசார். சில லட்சங்கள் மதிப்புமிக்க இந்த போதைப்பொருளை அவரது மணி பர்ஸிலும், கார் சீட்டுக்கு கீழும் இருந்ததை போலீசார் கண்டறிந்துள்ளனர். அவர் பயணித்த காரில் அவருடன் இருந்த பாஜக இளைஞரணியை சேர்ந்த பிராபிர் குமார் தேவும் கைது செய்யப்பட்டுள்ளார். நியூ அலிப்பூர் பகுதியில் வைத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். பாமெலா கோஸ்வாமியை கைது செய்தபோது கூச்சலிட்டபடி போலீஸ் வேனில் ஏறினார்.
இதற்கிடையே, இந்த வழக்கில் மற்றொரு பாஜக பிரமுகர் சிக்கியிருக்கிறார். அவர் வேறு யாரும் அல்ல, மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரைச் சேர்ந்த மக்களவை எம்.பி. ராகேஷ் சிங். இவர் சிக்குவதற்கு காரணம், பாமெலா கோஸ்வாமிதான். போலீஸ் விசாரணையின்போது பாமெலா கோஸ்வாமி, ``பாஜக எம்.பி. ராகேஷ் சிங்கின் ஆட்கள் தனது காரில் கொக்கைன் பைகளை வைத்துள்ளனர். நம்பகமான ஆதாரங்களில் இருந்து எனக்கு தகவல் உள்ளது. ஐந்து நாட்களுக்கு முன்பு நான் ஒரு ஆடியோவை பதிவு செய்தேன்" என்று தெரிவித்தாக 'இந்தியா டுடே' செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், `தனக்கு எதிராக ஒரு "சதி" திட்டம் நடக்கிறது. எனவே, துப்பறியும் துறை (டிடி) அல்லது குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்" என்று நீதிமன்றத்தில் பாமெலாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.
பாமெலா குற்றம் சுமத்தியுள்ள பாஜக எம்.பி. ராகேஷ் சிங், பாஜக மேற்கு வங்க பொறுப்பாளரான கைலாஷ் விஜயவர்கியாவின் நெருங்கிய கூட்டாளி. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளித்துள்ள ராகேஷ் சிங், ``புகார் செய்வது மிகவும் எளிதானது. ஆனால் அதை நிரூபிப்பது கடினம். பாமெலா ஏன் என் பெயரை இழுத்தார் என்று அவரால் மட்டும்தான் சொல்ல முடியும். நான் சொல்லக்கூடியது என்னவென்றால், என்னை இழிவுபடுத்தும் சதிதான் இது. இந்த வகையான அழுக்கு அரசியலில் எனக்கு நம்பிக்கை இல்லை.
சில நாட்களுக்கு முன்பு பாரதி கோஷ் மற்றும் ஸ்வபன் தாஸ்குப்தா போன்ற தலைவர்களுக்கு எதிராக போலீசில் பாமெலா புகார் செய்தார். ஆனால், பாமெலாவின் தந்தையோ தனது சொந்த மகளுக்கு எதிராகவே புகார் கொடுத்திருக்கிறார். பாமெலாவுக்கு என்னவோ ஆகிவிட்டது" என்று விளக்கம் கொடுத்துள்ளார். பாஜக தலைவர்களுக்குள் நடக்கும் இந்த மோதல் இப்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்