ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், முதல் நிலை வீரர் நோவாக் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். அதேநேரத்தில் பெண்கள் பிரிவில், செரீனா வில்லியம்ஸ் அரையிறுதியில் தோல்வியடைந்தார்.
மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், பெண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஜப்பானின் நவோமி ஒசாகாவை சந்தித்தார். அதில் ஒசாகா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் செரீனாவை வீழ்த்தினார். இத்தொடரில் செரீனா பட்டம் வென்றிருந்தால் அதன் மூலம் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மார்கரெட் கோர்ட்டின் சாதனையை அவர் சமன் செய்திருப்பார். போட்டிக்கு பின் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நெகிழ்ச்சியோடு பேசிய செரீனா வில்லியம்ஸ், ஒரு கட்டத்தில் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் பாதியிலேயே வெளியேறினார்.
இதையடுத்து நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் கால் இறுதி ஆட்டத்தில், தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், ரஷ்யாவின் அஸ்லான் கராட்சேவை எதிர்கொண்டார். நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 6-3, 6-4, 6-2 நேர்செட்டில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 9 வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2NCJ0SXஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், முதல் நிலை வீரர் நோவாக் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். அதேநேரத்தில் பெண்கள் பிரிவில், செரீனா வில்லியம்ஸ் அரையிறுதியில் தோல்வியடைந்தார்.
மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், பெண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஜப்பானின் நவோமி ஒசாகாவை சந்தித்தார். அதில் ஒசாகா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் செரீனாவை வீழ்த்தினார். இத்தொடரில் செரீனா பட்டம் வென்றிருந்தால் அதன் மூலம் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மார்கரெட் கோர்ட்டின் சாதனையை அவர் சமன் செய்திருப்பார். போட்டிக்கு பின் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நெகிழ்ச்சியோடு பேசிய செரீனா வில்லியம்ஸ், ஒரு கட்டத்தில் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் பாதியிலேயே வெளியேறினார்.
இதையடுத்து நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் கால் இறுதி ஆட்டத்தில், தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், ரஷ்யாவின் அஸ்லான் கராட்சேவை எதிர்கொண்டார். நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 6-3, 6-4, 6-2 நேர்செட்டில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 9 வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்