இந்தியா இரண்டாவது டெஸ்ட்டின் முதல் பந்தில் இருந்தே தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தும் என எதிர்பார்ப்பதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டி அண்மையில் முடிவடைந்தது. முதல் டெஸ்ட்டில் இந்தியா 277 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இரட்டைச் சதமடித்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் ஆன்லைன் மூலம் பேசிய ஜோ ரூட் "நாளையப் போட்டியில் முதல் பந்தில் இருந்தே விராட் கோலி எங்கள் அணிக்கு அழுத்தம் கொடுப்பார் என நம்புகிறேன். நாளையப் போட்டியில் டாஸ் எதுவாக இருந்தாலும் இது நடக்கும். உள்நாட்டில் பிரமாதமான சாதனைகளை செய்தவர் கோலி. இந்தத் தொடரின் எதாவது ஒரு தருணத்தில் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டும் என கோலி்க்கு நன்றாகவே தெரியும்" என்றார்.
மேலும் "இலங்கையில் நடைபெற்ற போட்டியில் எப்படி வெற்றிப்பெற்றோமோ அதேபோல வெற்றியை இங்கும் தொடர விரும்புகிறோம். எப்படிப்பட்ட பிட்சாக இருந்தாலும் சரி, பயமில்லா கிரிக்கெட்டை விளையாடவே நாங்கள் விரும்புகிறோம். எதிரணிக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையிலே எங்களது அணுகுமுறை இருக்கும். இதுபோன்ற பார்முலாதான் எங்களுக்கு கடந்தக் காலங்களில் வெற்றியை தேடி கொடுத்தது" என்றார் ஜோ ரூட்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3766Z42இந்தியா இரண்டாவது டெஸ்ட்டின் முதல் பந்தில் இருந்தே தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தும் என எதிர்பார்ப்பதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டி அண்மையில் முடிவடைந்தது. முதல் டெஸ்ட்டில் இந்தியா 277 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இரட்டைச் சதமடித்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் ஆன்லைன் மூலம் பேசிய ஜோ ரூட் "நாளையப் போட்டியில் முதல் பந்தில் இருந்தே விராட் கோலி எங்கள் அணிக்கு அழுத்தம் கொடுப்பார் என நம்புகிறேன். நாளையப் போட்டியில் டாஸ் எதுவாக இருந்தாலும் இது நடக்கும். உள்நாட்டில் பிரமாதமான சாதனைகளை செய்தவர் கோலி. இந்தத் தொடரின் எதாவது ஒரு தருணத்தில் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டும் என கோலி்க்கு நன்றாகவே தெரியும்" என்றார்.
மேலும் "இலங்கையில் நடைபெற்ற போட்டியில் எப்படி வெற்றிப்பெற்றோமோ அதேபோல வெற்றியை இங்கும் தொடர விரும்புகிறோம். எப்படிப்பட்ட பிட்சாக இருந்தாலும் சரி, பயமில்லா கிரிக்கெட்டை விளையாடவே நாங்கள் விரும்புகிறோம். எதிரணிக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையிலே எங்களது அணுகுமுறை இருக்கும். இதுபோன்ற பார்முலாதான் எங்களுக்கு கடந்தக் காலங்களில் வெற்றியை தேடி கொடுத்தது" என்றார் ஜோ ரூட்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்