Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

இன்று முதல் அ‌‌‌தி‌‌‌மு‌‌‌க விருப்ப மனு விநியோகம்!

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு இன்று முதல் விருப்ப மனு விநியோகிக்கப்படுகிறது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு, சென்னை - ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று முதல் விருப்ப மனு விநியோகிக்கப்படுகிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர், விருப்ப மனு விநியோகத்தை தொடங்கி வைக்கின்றனர்.

image

இன்று முதல் மார்ச் 5 ஆம் தேதி வரை தினமும் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அதிமுக தலைமை ஏற்கெனவே தெரிவித்துள்ளது. தமிழகத்தில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கான விருப்ப மனுக்களை ஐந்தாயிரம் ரூபாய்க்கும், கேரளாவுக்கான விருப்ப மனுக்களை இரண்டாயிரம் ரூபாய்க்கும் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

தமிழகம் புதுச்சேரி தேர்தல்களில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.25 முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை காலை 10 மணி மாலை 5 மணி வரை விருப்பமனு அளிக்கலாம் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் விருப்பமனுவுக்கான காலக்கெடு பிப்ரவரி 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3kl8vEO

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்