கொரோனா பரவலுக்கு பருவநிலை மாற்றம் முக்கிய பங்கு வகித்திருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோய்த் தொற்று கடந்த ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது. அமெரிக்கா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து, தற்போதுதான் மீண்டு வருகின்றன. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 கோடியை கடந்து உயர்ந்துள்ளது. 23 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். வைரஸ் தொற்று பரவி வரும் அதே வேளையில் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் கொரோனா பரவலில் பருவநிலை மாற்றத்திற்கு முக்கிய பங்கு இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் இது குறிப்பிடப்பட்டுள்ளது
கடந்த 100 ஆண்டுகளில் நிலவிய வெப்ப நிலை, மழை நிலவரத்தை கணக்கில் கொண்டு பலவகை வெளவால் இனங்களின் இடப்பெயர்ச்சியை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். இதில், பருவ நிலை மாற்றம் காரணமாக 40 வெளவால் இனங்கள் கொரோனாவுக்கு முன்பாக சார்ஸ் நோய் பரவிய சீனா, லாவோஸ், மியான்மருக்கு இடம் பெயர்ந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வெளவால்களிடம் இருந்து கொரோனா பரவியதா என ஆராய்ச்சி தொடரும் நிலையில், கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவியதில் பருவநிலை மாற்றம் பங்கு வகித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்