Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

கன்னியாகுமரி: ஆன்லைனில் ரம்மி விளையாட செயின் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்!

https://ift.tt/3d8cO4A

குமரி மாவட்டம் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த மாணவர், மீண்டும் விளையாட பணம் தேவைப்பட்டதால் செயின்பறிப்பில் ஈடுபட்டு போலீசார் பிடியில் சிக்கிக் கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன அய்யர் தலைமையிலான போலீசார் காவல்நிலையம் முன்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் பைக்கில் வந்துள்ளார். போலீசார் பைக்கை நிறுத்த சைகை காட்டிய போது அவர் போலீசாரிடம் மாட்டி கொள்ளாமல் இருக்க வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.

image

போலீசார் சிறிது தூரம் விரட்டி சென்று வாலிபரை பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது அந்த வாலிபர் தான் குமரி மாவட்டம் மேக்காமண்டபம் அருகே ஈத்தவிளை பகுதியை சேர்ந்த ஜான் என்பவரது மகன் ஜெஸ்டின் ராஜ் என்றும் நாகர்கோவிலில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் கொரோனா காலகட்டங்களில் வீட்டில் இருந்தபோது ஜெஸ்டின் ராஜ் தனது தாயாரின் நகைகளை திருடி விற்று அதிலிருந்து கிடைத்த பணத்தை வைத்து செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதை பெற்றோர்கள் கண்டறிந்து ஜெஸ்டின் ராஜை அவரது பாட்டி வீட்டில் விட்டுள்ளனர்.

image

இதையடுத்து ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மோகம் குறையாத ஜெஸ்டின் ராஜ் மேற்கொண்டு விளையாட பணம் இல்லாததால் தனது நண்பன் ஜெரின் ராஜூடன் சேர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இந்நிலையில் கருங்கல் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு பெண்ணிடம் செயினை பறிக்க முயன்றபோது அந்த பெண் எதிர்த்து போராடியதில் அந்த பெண்ணிடம் இருந்த பாதி சங்கிலி மட்டும் கிடைத்து உள்ளது.

image

ஆதனால் அந்த பாதி சங்கிலியை தங்க நகை செய்யும் ஆசாரியிடம் கொடுத்து தனக்கு காப்பு செய்ய கொடுத்துவிட்டு திரும்ப வரும்போது போலீசாரிடம் மாட்டி கொண்டுள்ளான். இதனை தொடர்ந்து கருங்கல் போலீசார் ஜெஸ்டின் ராஜை கைது செய்து அவர் இதுவரை திருடிய நகைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆன்லைன் ரம்மி விளையாட ஆசைப்பட்டு பணம் நகை ஆகியவற்றை இழந்து படித்த இளைஞன் திருடனாக மாறி இருக்கும் நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்