பிபிசி நிறுவனத்தின் உலகச்செய்தி சேவைக்கு சீனாவில் தடைவிதிக்கப்பட்டுள்ளதற்கு அமெரிக்கா , பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பிபிசிக்கு சீனா தடை விதித்ததன் பின்னணி என்ன? விரிவாக காணலாம்.
உலகின் பிரபலமான செய்தி சேவை நிறுவனம் பிரிட்டனை சேர்ந்த பிபிசி. இந்த நிறுவனத்தின் செய்தி தொலைக்காட்சியான பிபிசி WORLD NEWS ஒளிபரப்புக்கு சீனா அரசு தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான சீனா அரசின் நடவடிக்கைகள் மற்றும் உய்கூர் இஸ்லாமியர்களை சீனா அரசு நடத்தும் விதம் குறித்து பிபிசி தொடர்ந்து செய்திகளை வெளியிட்டது வந்தது. ஆனால் சீனா குறித்த உண்மைக்கு மாறான தகவல்களை பிபிசி வெளியிடுவதாக குற்றம்சாட்டியுள்ள சீன அரசு இது தங்களின் தேசிய நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும் இருப்பதாக சாடியுள்ளது.
பிபிசி செய்தி சேவைக்கு தங்கள் நாட்டில் தடை விதிப்பதோடு ஓராண்டுக்கு உரிமத்தை புதுப்பிக்கமாட்டோம் என்றும் சீனா அரசு அறிவித்துள்ளது. சீனாவை பொறுத்தவரை பிபிசி செய்தி நிறுவனம் ஏற்கனவே பல கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தான் செயல்பட்டு வந்தது. பிபிசி இணையதளம் மற்றும் செயலி சீனாவில் முன்பே தடை செய்யப்பட்டிருக்கிறது. தொலைக்காட்சியும் சர்வதேச நாட்டவர்கள் தங்கும் விடுதிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் தங்குமிடங்களில் மட்டுமே ஒளிபரப்பாகும். தற்போது அதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் சீனாவின் அரசு தொலைக்காட்சியான CGTN யின் ஒளிபரப்புக்கு பிரிட்டன் அரசு தடை விதித்த நிலையில் பதிலடி கொடுக்கும் வகையில் சீனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சீனாவின் இந்த செயல் ஏமாற்றம் அளிப்பதாக பிபிசி தரப்பில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா , பிரிட்டன் ஆகிய நாடுகள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, ஊடக சுதந்தரத்தில் தலையிடுவதாக சீனாவை சாடியுள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்