புதுச்சேரி அரசியலில் அடுக்கடுக்காக குழப்பங்கள் நிலவும் சூழலில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று அம்மாநிலத்துக்கு வருகை தருகிறார்.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர். இதனால் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். இவை ஒருபுறம் இருக்க, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி திடீரென நீக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி அரசியலில் அடுக்கடுக்கான திருப்பங்கள் அரங்கேறி வரும் பரபரப்பான சூழலில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இன்று அம்மாநிலத்துக்கு வருகை தருகிறார்.
விமானம் மூலம் காலை பத்தரை மணிக்கு லாஸ்பேட்டை விமானத் தளத்துக்கு வரும் ராகுல், முத்தியால்பேட்டை - சோலை நகரில் மீனவர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர், பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார். மாலையில் AFT மைதானத்தில் நடைபெறும் பரப்புரை கூட்டத்திலும் ராகுல்காந்தி உரையாற்றுகிறார். ராகுல் வருகை காரணமாக, காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதனிடையே, புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா குறித்து, நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2LXEttXபுதுச்சேரி அரசியலில் அடுக்கடுக்காக குழப்பங்கள் நிலவும் சூழலில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று அம்மாநிலத்துக்கு வருகை தருகிறார்.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர். இதனால் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். இவை ஒருபுறம் இருக்க, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி திடீரென நீக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி அரசியலில் அடுக்கடுக்கான திருப்பங்கள் அரங்கேறி வரும் பரபரப்பான சூழலில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இன்று அம்மாநிலத்துக்கு வருகை தருகிறார்.
விமானம் மூலம் காலை பத்தரை மணிக்கு லாஸ்பேட்டை விமானத் தளத்துக்கு வரும் ராகுல், முத்தியால்பேட்டை - சோலை நகரில் மீனவர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர், பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார். மாலையில் AFT மைதானத்தில் நடைபெறும் பரப்புரை கூட்டத்திலும் ராகுல்காந்தி உரையாற்றுகிறார். ராகுல் வருகை காரணமாக, காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதனிடையே, புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா குறித்து, நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்