Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

"மோடி, அமித் ஷா ஆலோசனையால் 8 கட்ட தேர்தலா?" - மம்தா பானர்ஜி கேள்வி

https://ift.tt/3dQwiLB

மோடி, அமித் ஷா ஆலோசனையின் பேரில் 8 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டதா என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேற்கு வங்கத்தின் 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த முறை 7 கட்டங்களாக தேர்தல் நடந்த நிலையில், இந்த முறை எட்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக மார்ச் 27 ஆம் தேதி 30 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 2 ஆம் கட்டத்தேர்தல் ஏப்ரல் 1 ஆம்தேதியும், 3 ஆம் கட்டமாக ஏப்ரல் 6 ஆம்தேதியும் 4 ஆம் கட்டமாக ஏப்ரல் 10 ஆம்தேதி 44 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 17 ல் ஐந்தாம் கட்டமாகவும், ஏப்ரல் 22 ஆறாம் கட்டமாகவும், ஏப்ரல் 26 ஆம்தேதி ஏழாம் கட்டமாகவும், ஏப்ரல் 29 ஆம் தேதி 8 ஆம் கட்டமாகவும் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அசாம் சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 27 ஆம்தேதி முதல்கட்டமாகவும், ஏப்ரல் 1 ஆம் தேதி இரண்டாம் கட்டமாகவும், ஏப்ரல் 6 ஆம் தேதி மூன்றாம் கட்டத்திலும் தேர்தல் நடைபெறுகிறது.

image

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மம்தா, பிற மாநிலங்களில் ஒரு கட்டமாக தேர்தல் நடைபெறுவதை சுட்டிக்காட்டியுள்ளார். மேற்கு வங்காளத்தில் மோடியும் அமித் ஷாவும் விரிவாக பரப்புரை மேற்கொள்ள வசதியாகவே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும் பாஜக எவ்வளவு யுக்திகள் மேற்கொண்டாலும் தேர்தலில் தாங்கள்தான் ஜெயிக்கப்போவாகவும் மம்தா தெரிவித்தார். ’தான் வங்கத்தின் மகள்’ என்று தெரிவித்த மம்தா, தனது மண்ணின் மக்களை பற்றி பாஜகவை விட தான் அதிகம் அறிந்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்