கிருஷ்ணகிரி அருகே நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்
ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த 8 பேர் பெங்களூரிலுள்ள ஒன்டர்லா சுற்றுலா தளத்திற்கு ஆம்னி வேன் மூலம் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே ஆம்னி வேன் வந்துகொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கு பயணிகளை இறக்கிவிட்டுக்கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதி விமத்திற்குள்ளானது. இதில் பேருந்தில் இருந்து இறங்கி வந்த தேவராஜ் என்பவரும் ஆம்னி வாகனத்தில் வந்த பிரசாந்த், லிங்கா, சுரேந்தர், சிவகுமார் மற்றும் அதன் ஓட்டுநர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவேரிப்பட்டினம் போலீசார் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த 6 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை நடந்த இந்த கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3j6K5hmகிருஷ்ணகிரி அருகே நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்
ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த 8 பேர் பெங்களூரிலுள்ள ஒன்டர்லா சுற்றுலா தளத்திற்கு ஆம்னி வேன் மூலம் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே ஆம்னி வேன் வந்துகொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கு பயணிகளை இறக்கிவிட்டுக்கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதி விமத்திற்குள்ளானது. இதில் பேருந்தில் இருந்து இறங்கி வந்த தேவராஜ் என்பவரும் ஆம்னி வாகனத்தில் வந்த பிரசாந்த், லிங்கா, சுரேந்தர், சிவகுமார் மற்றும் அதன் ஓட்டுநர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவேரிப்பட்டினம் போலீசார் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த 6 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை நடந்த இந்த கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்