இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2ஆவது கிரிக்கெட் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் சென்னையில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து 227 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முக்கிய வீரர்கள் இன்றி ஆஸ்திரேலிய அணியை அவர்கள் மண்ணிலேயே வீழ்த்தியிருந்த இந்திய அணிக்கு சொந்த மண்ணில் கிடைத்த இந்த தோல்வி பெரும் அதிர்ச்சியை தந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற மீதமுள்ள 3 டெஸ்ட்டுகளில் இரண்டை கட்டாயம் வெல்லவேண்டும் என்பதுடன் எந்த ஒரு போட்டியிலும் தோற்கக் கூடாது என்ற நெருக்கடியும் தற்போது ஏற்பட்டுள்ளது.
அதே நேரம் இலங்கைக்கு எதிரான தொடரை அவர்கள் மண்ணிலேயே வென்றதுடன் இந்தியாவையும் முதல் போட்டியில் வீழ்த்தியிருப்பதால் இங்கிலாந்து அணி அபார தன்னம்பிக்கையுடன் 2ஆவது டெஸ்ட்டை எதிர்கொள்கிறது. இந்திய அணிக்கு சவாலான இச்சூழலில் சென்னையில் இரண்டாவது போட்டி தொடங்குகிறது. இந்திய அணியை பொருத்தவரை தொடக்க வீரர் ரோகித் சர்மா, நடுவரிசை வீரர் அஜிங்க்ய ரஹானே முழுமையான ஆட்டத்திறனுடன் இல்லாதது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கில் பளிச்சிட்டாலும் பந்துவீச்சில் சிறப்பாக வீசாதது ஏமாற்றமாக அமைந்தது.
2ஆவது போட்டிக்கான இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர் ஷாபாஸ் நதீமிற்கு பதில் காயத்திலிருந்து மீண்ட ஆல்ரவுண்டர் அக்ஸர் பட்டேல் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இது இந்திய அணிக்கு பலம் சேர்க்கும் அம்சம்.
இங்கிலாந்து அணியை பொருத்தவரை 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ஸ்டோன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இங்கிலாந்து அணியின் வீரர்கள் சுழற்சி கொள்கைப்படி ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு பதில் ஸ்டூவர்ட் பிராட் களமிறங்க உள்ளார்.
ஜோஸ் பட்லருக்கு பதில் விக்கெட் கீப்பராக பென் ஃபோக்ஸ் செயல்படுவார் என கேப்டன் ஜோ ரூட் கூறியுள்ளார். சுழற்பந்துவீச்சாளர் டாம் பெஸ் -க்கு பதிலாக மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் மொயின் அலிக்கு 2ஆவது டெஸ்டில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்ட ஆடுகளத்தில் இந்தப்போட்டி நடக்கிறது. இந்தக்களம் முதல் டெஸ்டில் பயன்படுத்தப்பட்ட களத்தை காட்டிலும் முன்னதாகவே சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு முதல் போட்டியில் அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டாவது போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அரங்கத்தில் பாதியளவு இருக்கைகளில் மட்டுமே ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3jL97TVஇந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2ஆவது கிரிக்கெட் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்