உத்தராகண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உடைப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இறந்த 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 171 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை
உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பனிப்பாறைகள் உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் தவுலிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அப்பகுதியில் இருந்த இரு நீர் மின் நிலையங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் அப்பகுதியில் இருந்த பலரும் வெள்ளத்தில் சிக்கி இறந்தனர். நீர் மின் நிலையங்களுக்காக ஏற்படுத்தப்பட்டிருந்த சுரங்கப்பாதைகளுக்குள் 30 பேருக்கு மேல் சிக்கியிருக்கலாம் எனக் கருதி மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. இதில் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தவிர முப்படைகளின் குழுவினர், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு பணியினரும் பணியாற்றி வருகின்றனர்.
மேலும் நீர் மின் நிலையங்கள் அருகில் உள்ள கிராமவாசிகளின் வீடுகளும் அடித்துச்செல்லப்பட்டிருப்பதால் அதற்குள் இருந்தவர்கள் நிலை தெரியவில்லை. திடீர் வெள்ளம் சூழ்ந்ததன் காரணமாக 13 கிராமங்கள் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் அங்குள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டு தரப்பட்டுள்ளதாகவும் உத்தராகண்ட் காவல் துறை தெரிவித்துள்ளது.
பல டன்கள் எடை கொண்ட பிரமாண்ட பனிப்பாறைகள் திடீரென வழுக்கிச் சென்று ஓரிடத்தில் விழுந்து உருகி வெள்ளமாக மாறியிருக்கலாம் என தெரியவருவதாகவும் எனினும் இந்த விபத்தின் பின்னணி குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் உத்தராகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்காலத்தில் இது போன்ற விபத்துகளை எதிர்காலத்தில் தவிர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இதற்கிடையில் இந்நிகழ்வுக்கு அமெரிக்கா இரங்கல் தெரிவித்துள்ளது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3ry6ZBsஉத்தராகண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உடைப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இறந்த 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 171 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை
உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பனிப்பாறைகள் உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் தவுலிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அப்பகுதியில் இருந்த இரு நீர் மின் நிலையங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் அப்பகுதியில் இருந்த பலரும் வெள்ளத்தில் சிக்கி இறந்தனர். நீர் மின் நிலையங்களுக்காக ஏற்படுத்தப்பட்டிருந்த சுரங்கப்பாதைகளுக்குள் 30 பேருக்கு மேல் சிக்கியிருக்கலாம் எனக் கருதி மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. இதில் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தவிர முப்படைகளின் குழுவினர், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு பணியினரும் பணியாற்றி வருகின்றனர்.
மேலும் நீர் மின் நிலையங்கள் அருகில் உள்ள கிராமவாசிகளின் வீடுகளும் அடித்துச்செல்லப்பட்டிருப்பதால் அதற்குள் இருந்தவர்கள் நிலை தெரியவில்லை. திடீர் வெள்ளம் சூழ்ந்ததன் காரணமாக 13 கிராமங்கள் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் அங்குள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டு தரப்பட்டுள்ளதாகவும் உத்தராகண்ட் காவல் துறை தெரிவித்துள்ளது.
பல டன்கள் எடை கொண்ட பிரமாண்ட பனிப்பாறைகள் திடீரென வழுக்கிச் சென்று ஓரிடத்தில் விழுந்து உருகி வெள்ளமாக மாறியிருக்கலாம் என தெரியவருவதாகவும் எனினும் இந்த விபத்தின் பின்னணி குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் உத்தராகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்காலத்தில் இது போன்ற விபத்துகளை எதிர்காலத்தில் தவிர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இதற்கிடையில் இந்நிகழ்வுக்கு அமெரிக்கா இரங்கல் தெரிவித்துள்ளது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்