சட்டப்பேரவைத்தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 25ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் புதுச்சேரி தேர்தல்களில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.25 முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை காலை 10 மணி மாலை 5 மணி வரை விருப்பமனு அளிக்கலாம்.
தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகளுக்கு ரூ.15 ஆயிரம், தனித்தொகுதிக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டமன்றத்தொகுதிக்கு ரூ.10 ஆயிரம், தனித்தொகுதிக்கு ரூ.5 ஆயிரம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக திமுக ஏற்கெனவே விருப்ப மனுக்களை விண்ணப்பிக்க தொடங்கிவிட்டது. அதிமுக வரும் 24ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/37mW1aeசட்டப்பேரவைத்தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 25ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் புதுச்சேரி தேர்தல்களில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.25 முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை காலை 10 மணி மாலை 5 மணி வரை விருப்பமனு அளிக்கலாம்.
தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகளுக்கு ரூ.15 ஆயிரம், தனித்தொகுதிக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டமன்றத்தொகுதிக்கு ரூ.10 ஆயிரம், தனித்தொகுதிக்கு ரூ.5 ஆயிரம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக திமுக ஏற்கெனவே விருப்ப மனுக்களை விண்ணப்பிக்க தொடங்கிவிட்டது. அதிமுக வரும் 24ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்