Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

தமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை

தமிழகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு ரயில் விபத்தால் ஏற்படும் மரணங்கள் 57 சதவீதம் குறைந்துள்ளதாக ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு ரயில் விபத்து மரணங்கள் 57 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு 2,502 வழக்குகளும், 2019ஆம் ஆண்டு 2,600 வழக்குகளும் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2020ஆம் ஆண்டு 1,129 ரயில் விபத்து வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இருப்புப்பாதை காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் எடுத்து முயற்சியின் காரணமாக கடந்த 2020 ஆண்டு ரயில் விபத்துக்கள் 57 சதவீதம் குறைந்துள்ளன என்று தமிழக ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.

image

கடந்த 2018ஆம் ஆண்டு மொத்தம் 2,517 விபத்து மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில் 2,173 பேர் ஆண்கள். 344 பேர் பெண்கள். இதுவே கடந்த 2020-ல் 1,137 பேர் ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும் கடந்த 2020ஆம் ஆண்டு ரயில் நிலையங்கள், ரயில் தண்டவாளத்தை கடக்கும் பாதைகள், ரயில் தண்டவாளத்தின் அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் அடிக்கடி விபத்து நடக்கும் இடங்கள் என மொத்தம் 14,845 இடங்களில் ரயில்வே போலீசாரால் விழிப்புணர்வு பரப்புரைகள் செய்யப்பட்டன.

கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு ரயில் விபத்து தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. ரயில் பயணிகளின் பாதுகாப்பு குறித்து நான்கு குறும்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டன. விபத்துக்கள் மற்றும் விபத்து மரணங்கள் குறைவிற்கு கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் ஒரு காரணமாக இருந்தாலும், 57 சதவீதம் குறைவிற்கு அதுவே காரணமாக இருக்க முடியாது. பொருட்களை ஏற்றிச் செல்லும் ரயில்கள், பணியாளர்கள் ரயில்கள், மருந்து பொருட்களை ஏற்றி சென்ற ரயில்கள் மற்றும் சோதனை ஓட்ட ரயில்கள் பொது முடக்க காலத்திலும் இயக்கப்பட்டன.

image

எனவே ரயில்வே போலீசார் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஆண்டு 57 சதவீதம் விபத்து மரணங்கள் குறைந்துள்ளன. என்று ரயில்வே காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு சார்பில் ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.

ரயில் பாதையில் அத்துமீறி நுழைவதன் மூலம் ஏற்படும் விபத்துகளை தடுக்க முக்கியத்துவம் மற்றும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ரயில்வே போலீசார் மேற்கொண்ட விபத்துத் தடுப்பு முயற்சிகள் நல்ல பலன்களை கொடுத்துள்ளதால் இந்த நடவடிக்கைகள் வரும் மாதங்களிலும் தொடரும்.

ரயில் நிலையங்களில் நடைபெறும் அனைத்து விதமான குற்ற நடவடிக்கை தொடர்பான தகவலை தெரிவிக்க ரயில்வே காவல் உதவி மைய எண் 1512 மற்றும் செல்போன் எண் 9962500500 அனைத்து பயணிகளுக்கும் தெரியும் வண்ணம் அனைத்து ரயில் நிலையங்களிலும், ரயில் வண்டிகளிலும் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. காணாமல் போன குழந்தைகள், அனாதை குழந்தைகள், தனியாக தவிக்கும் குழந்தைகள் பற்றிய தகவல்களை 'காவலன்' மற்றும் 'தீ' செயலி மூலம் இரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் தரலாம் என்றும் ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3uHlmpi

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்