இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை காண 15 ஆயிரம் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனத் தெரிகிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இப்போது முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. கொரோனா விதிமுறைகள் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் மத்திய அரசின் பொது முடக்கத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, சென்னையில் பிப்ரவரி 13 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதனையடுத்து இந்தப் போட்டிக்கனா டிக்கெட் விற்பனை பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்குகிறது. மேலும் 15 ஆயிரம் டிக்கெட் மட்டுமே விற்பனை செய்யப்படும் எனவும் தெரிகிறது. இந்த டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என்றும் மைதானத்துக்கு போட்டியை காண வருகை தரும் ரசிகர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3q1P45Oஇந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை காண 15 ஆயிரம் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனத் தெரிகிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இப்போது முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. கொரோனா விதிமுறைகள் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் மத்திய அரசின் பொது முடக்கத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, சென்னையில் பிப்ரவரி 13 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதனையடுத்து இந்தப் போட்டிக்கனா டிக்கெட் விற்பனை பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்குகிறது. மேலும் 15 ஆயிரம் டிக்கெட் மட்டுமே விற்பனை செய்யப்படும் எனவும் தெரிகிறது. இந்த டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என்றும் மைதானத்துக்கு போட்டியை காண வருகை தரும் ரசிகர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்