மகாராஷ்டிராவில் லாரி கவிழ்ந்து 16 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டத்தில் உள்ள நேரேவிலிருந்து சோப்டா வழியாக ராவருக்கு பப்பாளியை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, வழியில் திடீரென்று தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இடிபாடுகளில் சிக்கி லாரியில் பயணித்த 16 தொழிலாளர்கள் பலியாகினர்.
இறந்தவர்கள் அனைவரும் அதே மாவட்டத்தில் உள்ள அபோடா, கெர்ஹாலா மற்றும் ராவர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இறந்தவர்களில் இரண்டு குழந்தைகளும் அடங்குவர். பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய ஐந்து தொழிலாளர்கள் கிராமப்புற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3al7k4Tமகாராஷ்டிராவில் லாரி கவிழ்ந்து 16 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டத்தில் உள்ள நேரேவிலிருந்து சோப்டா வழியாக ராவருக்கு பப்பாளியை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, வழியில் திடீரென்று தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இடிபாடுகளில் சிக்கி லாரியில் பயணித்த 16 தொழிலாளர்கள் பலியாகினர்.
இறந்தவர்கள் அனைவரும் அதே மாவட்டத்தில் உள்ள அபோடா, கெர்ஹாலா மற்றும் ராவர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இறந்தவர்களில் இரண்டு குழந்தைகளும் அடங்குவர். பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய ஐந்து தொழிலாளர்கள் கிராமப்புற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்