கொரோனா தடுப்பூசியை எவ்வித தடையுமின்றி மக்களிடம் கொண்டு சேர்ப்பது தொடர்பான ஒத்திகை, நாடு முழுவதும் இன்று காலை நடைபெறுகிறது.
கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வரும் மத்திய அரசு. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை நடத்துகிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசியை எப்படி கொண்டு சேர்ப்பது? எங்கே தடுப்பூசியை பராமரிப்பது? பராமரிப்பு கிடங்கில் இருந்து சுகாதார நிலையங்களுக்கு எப்படி தடுப்பூசியை கொண்டு செல்வது? அதற்கு எவ்வளவு நேரம் ஆகிறது? அதுவரை மருந்து குறிப்பிட்ட வெப்பநிலையில் பராமரிக்கப்படுகிறதா? பயனாளர்களை எப்படி தேர்வு செய்வது? அவர்களை எங்கே அமர வைப்பது ? ஊசி போட்டப்பின்னர் அவர்களின் உடல்நிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்படுகிறதா? என்பன உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இந்த ஒத்திகை மூலம் கண்காணிக்கப்படும். அதில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அவை சரி செய்யப்படும்.
முதல்கட்டமாக ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் நடந்த ஆரம்ப கட்ட ஒத்திகையின் போது கோவின் செயலியில் குறிப்பிட்ட கிராமங்களின் PINCODEகள் ஏற்கவில்லை , தடுப்பூசி போட்ட பின்பு நோயாளிகளின் உடலில் ஏற்படும் மாற்றங்களை உடனே அப்டேட் செய்ய முடியவில்லை என்பன உள்ளிட்ட பிரச்னைகள் இருந்ததாக சுகாதார பணியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். மேலும் இந்த பணிக்காக நியமிக்கப்படும் ஐந்து சுகாதார பணியாளர்கலில் யார் எந்த பணியை மேற்கொள்வது என்ற குழப்பம் இருந்ததாக சொல்லப்படுகிறது. எனவே அவற்றை சரி செய்து இரண்டாம் கட்ட ஒத்திகை நடைபெறுகிறது.
தடுப்பூசி ஒத்திகையில் பங்கேற்கும் பயனாளர்கள் முன்கூட்டியே தேர்வு செய்யப்படுகின்றனர். குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட மருத்துவமனைக்கு வந்துவிட வேண்டும் என அவர்களுக்கு குறுந்தகவல் மூலம் தகவல் அளிக்கப்படுகிறது. தடுப்பூசி ஒத்திகைக்காக மருத்துவமனைகளில் மூன்று அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் அறை காத்திருப்பு அறை, இரண்டாவது அறை தடுப்பூசி போடும் அறை, மூன்றாவது அறை தடுப்பூசி போட்ட பின்னர் பயனாளிகள் 30 நிமிடங்கள் ஓய்வெடுப்பதற்கான அறை. அனைத்து பணிகளும் முடிந்த பின்னர் கோவின் செயலி மூலமாக தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும். இத்தகவல் அனைத்துமே கோவின் செயலியில் சேகரிக்கப்படும்.
தடுப்பூசி ஒத்திகையை மேற்கொள்ளும் அதே வேளையில் தடுப்பூசி தொடர்பாக சமூகவலைதளங்கள் தொடங்கி உள்ளூர் அளவில் என் எஸ் எஸ் அமைப்பு, சுயஉதவி குழுக்கள் என பல தரப்பினரையும் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3o2k4Saகொரோனா தடுப்பூசியை எவ்வித தடையுமின்றி மக்களிடம் கொண்டு சேர்ப்பது தொடர்பான ஒத்திகை, நாடு முழுவதும் இன்று காலை நடைபெறுகிறது.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்