நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2021 தற்போது தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரு அவையும் கூடியிருக்கும் முதல் பட்ஜெட் கூட்டுக்கூட்டத்தை தொடங்கிவைத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 16 கட்சிகள், ஜனாதிபதி உரையை புறக்கணித்தன.
ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள்:
* "பெருந்தொற்று சமயத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானது. இக்கட்டான சூழலிலும் இந்தியா தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
* கொரோனா, நிலநடுக்கம், பெருவெள்ளம் என பலவற்றையும் நாம் தைரியத்துடன் எதிர்கொண்டு இருக்கிறோம். கடினமான இலக்குகளையும் நாம் சாதித்துக் காட்டியிருக்கிறோம்.
* கொரோனா காலத்தில் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பல உயிர்களை காப்பாற்றியுள்ளது. கொரோனா காலத்தில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 6 எம்.பிக்களை இழந்துள்ளோம்.
* ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் இந்த பெரும்தொற்று காலத்தில் பெரும் பலனை அளித்தது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது கட்டுக்குள் உள்ளது.
* பெண்கள், ஏழைகள் என பலரும் அரசின் நலத்திட்டங்களால் பலன் அடைந்துள்ளனர்.
* கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சுய சார்புடன் இருப்பதுதான் தற்போதைய இந்தியாவின் தாரக மந்திரமாக இருக்கிறது.
* பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா உள்ளிட்ட பல திட்டங்கள் கடினமான காலத்தில் பெரும்பலனை அளித்துள்ளது.
* இந்தியாவின் இலக்கு என்பது நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமல்ல. நாட்டில் பலருக்கும் மிக குறைவான விலையில் மருத்துவ வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
* விவசாய பொருட்கள் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பெரும்பலனை அளிப்பதாக இருக்கிறது. நாட்டில் குறு விவசாயம் செய்யும் நிலங்களின் எண்ணிக்கை 56 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.
* விவசாயிகள் தங்களது பொருட்களுக்கு உரிய விலையை பெறுவதை அரசு உறுதி செய்யும். வேளாண் சட்டங்கள் தொடர்பான சில முரண்பாடான தகவல்களை நீக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருக்கிறது.
* குடியரசு தினத்தன்று டெல்லியில் நடந்த வன்முறை சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. அது கவலைக்குரியது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.
* நமது கிராமப்புற பகுதிகளை வலுப்படுத்தும் முயற்சிகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த பயிர் காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் சிறு, குறு விவசாயிகள் பெரும் பலன் அடைந்துள்ளனர்.
* 3 வேளாண் சட்டங்கள் குறித்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மத்திய அரசு கட்டுப்படும்.
* விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு உரிய விலையை உறுதி செய்வதே அரசின் கொள்கையாகும்.
* வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்று, மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. மத்திய அரசு வேளாண் சட்டங்கள் தொடர்பான தவறான தகவல்களை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்