செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் நெரிசல் அதிகரிப்பால் கட்டணம் வசூலிக்காமல் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
பொங்கல் விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் சென்னைக்கு மக்கள் திரும்பி வருவதால் சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக செங்கல்பட்டு அருகேயுள்ள பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் குவியும்போது கட்டணம் தவிர்க்கப்பட்டும், நெரிசல் சற்று சரியானதும் மீண்டும் கட்டணம் வசூலிக்கப்பட்டும் வருகிறது.
மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் கிட்டத்தட்ட 1 கி.மீ தூரத்திற்கு வாகன நெரிசலை சரிபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொதுவாகவே அனைத்து நாட்களிலும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம். ஆனால் இதுபோன்ற கூட்டநெரிசல் நேரங்களில் மக்கள் நலன்கருதி கட்டணம் வசூலிப்பதை சற்று நிறுத்திவைக்கலாம் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதற்கு பலனாக, தற்போது கூட்ட நெரிசல் நேரங்களில் மட்டும் பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணமின்றி வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3ikuGcY

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்